DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுங்கள்

DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமாறு, நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர் மற்றும் தொழில் முயற்சியாளர்களை கேட்டுக் கொள்கின்றேன் – உலகளாவிய தொழில் முயற்சியாளர்கள் வாரத்தை ஆரம்பித்து வைத்து தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு. DIGIECON 2030 வேலைத் திட்டத்துடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுமாறு நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கேட்டுக்கொள்வதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜி இகொன் … Read more

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவினால் நேற்று (14) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டயானா கமகே, கௌரவ ரோஹன பண்டார, கௌரவ சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை … Read more

ஐ சி சி தடையை நீக்குதல் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை இழத்தல் குறித்து கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர்கள் உப குழுவுக்கு

ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானிப்பு. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும் , கிரிக்கெட் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம்வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தார். மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு … Read more

பாதுகாப்பு மூலோபாயத்திற்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தொடர் முயற்சிகள் நம் அனைவரிரினதும் முக்கிய பொறுப்பாகும்

‘பாதுகாப்பு மூலோபாயத்திற்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தொடர் முயற்சிகள் நம் அனைவரிரினதும் முக்கிய பொறுப்பாகும்’ – பாதுகாப்பு செயலாளர தற்போது மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய எந்தவொரு சவால்மிக்க மோதலையும் எதிர்கொள்ள நமது ஆயுதப் படைகள் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். (நவம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (CMETSL) அங்கத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை … Read more

நாட்டிற்கு வினைத்திறன் மிக்க புகையிரத சேவையை நடைமுறைப்படுத்துவேன் – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

நாட்டிற்கு வினைத்திறன் மிக்க புகையிரத சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுப் போக்குவரத்து பேருந்துகளினால் ஏற்படும் பல்வேறு விபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… துறைசார் அமைப்பினால் இந்நாட்டில் ரயில்வேயை அபிவிருத்தி செய்ய முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துறை அமைப்பைக் கைவிட்டு … Read more

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (நவம்பர் 14) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இதன்போது, கெப்டன் முகுந்தனின் புதிய நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். … Read more

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமானால், கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும். அரசியலை விடுத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றுத்திற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதே எனது நோக்கமாகும். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் போக்கை மாற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம்- ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி … Read more

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

உலக உணவுத் திட்டம் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுகளை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டிவருகின்றது. அந்தவகையில், நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2793 பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் … Read more

2024 ஆம் ஆண்டில் 1.8 % அபிவிருத்தியை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம்

சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க. 2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர … Read more

வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று யோசனைகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன – வர்த்தக அமைச்சர்

வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று யோசனைகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் முதலாம் நாளான இன்று (14) விவாதத்தில் கலந்து கொண்டு வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மற்றும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டிற்கு புதிய … Read more