நாட்டின் கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை – ஏனைய பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 14 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படும்.  வடக்கு, வடமேல், மேல் மற்றும் தெண் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில், அவ்வப்போது போது … Read more

மலையக பெருந்தோட்ட மக்களுக்கென சில திட்டங்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் … Read more

2024 பட்ஜெட் என்பது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத்திட்டமாகும்

இந்தத் திட்டத்துடன் நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கட்சி போதமின்றி இணையுங்கள் – ஜனாதிபதி. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டம் எனவும் அத்துடன் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார முறைமைக்கு அடித்தளமிடும் வரவு செலவுத் திட்டம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அந்த வேலைத்திட்டத்துடன் நாட்டிற்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்வதாகவும் … Read more

வரவுசெலவுத்திட்டம் இன்று (13) முதல் டிசம்பர் 13 வரை

• ஜனாதிபதியினால் வரவுசெலவுத்திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு முன்வைக்கப்படும் • இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நவம்பர் 14ஆம் முதல் 21 வரை, இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு• குழுநிலை நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை, மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது … Read more

இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு அதிக இடம்…

தொடர்ச்சியான விரிவான கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின்; போதே ஜனாதிபதி இதனைத் தெலிவித்தார். மேலும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறாத இளைஞர், யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான பயிற்சி நெறிகளுக்கு 150 மில்லியன் ரூபாவை இலங்கை மன்றத்திற்கு ஒதுக்க இம்முறை வரவு செலவுத் … Read more

பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க ரூ. 1.5 பில்லியன்

பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் கிரிக்கட் போட்டிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும்,இந்த நிதி வசதிகளை வழங்கும்போது, வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நகர்ப்புற திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

2024 வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு நகர்ப்புற திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3000 ரூபா வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் வாடகையை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தி, அந்தந்த வீடுகளின் முழு உரிமையையும் அந்த வீடுகளுக்கு வழங்க இவ் வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உரித்தாகும்.

அரசு ஊழியரகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்

2024 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு, அக் கொடுப்பனவு 17,800 ரூபாவாக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 7800 ரூபாவாக வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024ஆம் ஆண்டில் 10,000 ரூபா அதிகரித்து 17800 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆத்துடன், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் … Read more

இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக DIGIECON பொருளாதார எண்ணக் கருவை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார்

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன. 2030 ஆம் ஆண்டாகும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன தெரிவித்தார். … Read more

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம் இந்து சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு இந்து சமய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிகழ்வில் கலந்து கொண்ட இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களுடன் சிநேகபூர்வ … Read more