நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படும். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடக்கு, தெற்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் … Read more

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து அடுத்த சிலநாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

. 2023 நவம்பர் 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து அடுத்த சிலநாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி … Read more

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

  சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) … Read more

ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் “ஆயுதப்படையினர் நினைவு தினம் – 2023” பிரதான வைபவமும் பொப்பி மலர் தின நிகழ்வும் நேற்று (11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்:-  அமைச்சர்  டக்ளஸ் வலியுறுத்தல் – ஜனாதிபதி தீர்மானம்

  அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09.11.2023) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட  தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள்  தொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளிப்படுத்தினார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த … Read more

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு

  ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் இருந்து 350 மில்லியன் ரூபா, லங்கா போஸ்பேட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா, பி.சி.சி. நிறுவனம் 100 மில்லியன் ரூபா, தேசிய உப்பு நிறுவனம் 100 மில்லியன் ரூபா, இலங்கை சீமெந்துக் … Read more

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் திட்டம்

  _விளையாட்டு சம்மேளங்களின் அதிகாரிகள் விளையாட்டுத் துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்படுவர் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்._ சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற … Read more

சர்வதேச சமூகத்துடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம் – ஜனாதிபதி

  இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென கருதப்படும் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரையிலானது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச … Read more

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாக  வர்த்தக நிலையங்களை  சுற்றிவலைக்க    நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி கட்டுப்பாட்டு விலை தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை  சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.   அரசாங்கத்தின் நவம்பர் மூன்றாம் திகதிய அதி விசேஷமான வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, 2003 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டம்  (திருத்தியமைக்கப்பட்டது) 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ் சீனிக்கான ஆகக்கூடிய கட்டுப்பாட்டு விலையை விதித்து அதற்கிணங்க சீனி வியாபாரத்தில் … Read more