பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது

  • இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் … Read more

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடியொற்றிய, முறையான வரைவொன்றை தயாரித்து புதிய விளையாட்டு சட்டத்தை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். இலங்கையின் தற்போதைய நீதி கட்டமைப்பு மற்றும் விளையாட்டு … Read more

2024 இல் உணவுப் பணவீக்கம் மேலும் குறைவடையும்

விலைக் கட்டுப்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன – வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ.   உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக … Read more

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! -அபிவிருத்தி, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு குறித்து கலந்துரையாடல்- இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம்மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.   இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், … Read more

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கும் அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை –  சுகாதார அமைச்சர் 

தற்போதைய பொருளாதார நிலைமையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கு வழங்க முடியுமான அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கேட்ட வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்: சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவத்துறையைச் சேர்ந்த … Read more

கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023, டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் – பிரதமர்

கிராம சேவை உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புதற்கான பரீட்சை டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான பரீட்சைகள் எப்போது நடை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2023.06.30ம் திகதி வரை நாட்டில் 2763 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், 2021.03.31 … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் “பாடசாலைகளுக்கான உணவூட்டல்” நிகழ்ச்சித் திட்டம்

  உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போஷாக்கான உணவு வழங்கல் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் உலக உணவுத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் “வீட்டில் வளர்க்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கான உணவூட்டல் (Home Grown School Food Feeding Programme) ” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பிரிவின் ஒருங்கிணைப்பில் அமுல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான நோக்குநிலை நிகழ்ச்சி (7) செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி … Read more

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்

  • பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு பி.ப 5.30 மணிக்கு “ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டுவரும் பிரேரணை மீதான விவாதத்தை இன்று (09) நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த … Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றைத் அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கிரிக்கெட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் இன்று … Read more

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முன்னேற்றத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கையின் புதிய ஏற்றுமதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது (7) அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முன்னேற்றத்திற்கு மிகவும் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கான பலமான பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலீட்டுச் சபை … Read more