அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்

  நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் செயல்களை ஆதரிக்காதீர்கள். 16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் … Read more

அனைத்து நலன்புரி வேலைத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம்

அஸ்வெசும திட்டத்திற்காக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனியான அதிகாரிகள். அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (07) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இந்த சந்திப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, … Read more

இலங்கை அரசாங்கம் இனி வரும் காலங்களில் எந்த ஒரு நிலத்தையும்; வெளிநாட்டவர்களுக்கு விற்காது

அரசாங்கம், ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மாணித்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இருந்தபோதிலும், அரசாங்க Nலைத்திட்டங்களுக்காக எந்த நிலமும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என்று … Read more

இராணுவ போர் கருவி படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு

இராணுவ போர் கருவி படையணியின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ அவர்கள் ஒக்டோபர் 30 தொம்பேகொட இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். அன்றைய நிகழ்வில் இராணுவ போர் கருவி படையணியின் நிலைய தளபதி கேணல் கேஎம்எடபிள்யூகே பெரேரா எஎடிஓ, பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ ஆகியோர் பிரதான நுழைவாயிலில் புதிய படைத் தளபதிக்கு வரவேற்பளித்தனர். இராணுவ போர் கருவி படையணியின் படையினர் … Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரியப் பிரதமர் ஹன் டக் சூ அவர்களைச் சந்தித்தார்

• சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் (KOICA) ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கும் எனக் கொரியப் பிரதமர் தெரிவிப்பு• கொரியாவில் பணியாற்றுவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கைப் பணியாளர்களுக்கு எதிர்காலத்தில் இந்நாட்டிலேயே கொரிய நிறுவனத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க உறுதி• இலங்கையில் கொரிய முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க ஒன்றிணைந்த பொருளாதார ஆணைக்குழு (Economic Joint Commission)• இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது பற்றிக் கலந்துரையாடல் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் (KOICA) ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் … Read more

சபாநாயகரின் அறிவித்தல்கள்

◾ “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (07) பாராளுமன்றத்திற்கு அறித்தார். “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் 2023 ஒக்டோபர் 03 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதால், அரசியலமைப்பின் 121(3) ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலத்தை அரசியலமைப்புக்குட்பட்ட தன்மையை தீர்மானிப்பதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்பதாலும், அதற்கமைய, இந்த … Read more

திருட்டு, மோசடி, ஊழல், முறைகேடுகள் இல்லாத தேசிய கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு

திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தேசிய கிரிக்கெட் வளையாட்டை மீண்டும் கட்டியெழுப்பி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அலி சப்ரி, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகிய நான்கு முக்கிய அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான … Read more

இலங்கைக்கான தூதரகத் தலைவர்கள் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

பங்களாதேஷ், பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், கியூபா, எகிப்து, இத்தாலி, நேபாளம், பாகிஸ்தான், கிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் இந்தியக் ஆகிய நாடுகளுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பத்து புதிய தூதுவர்கள் சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 05) சிறப்பு நோக்குநிலை நிகழ்ச்சியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர். வருகை தந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியரச்சி ஆர்டப்ளியுபீ … Read more

2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த. 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே … Read more