காஸா எல்லையின் மோதல் நிலைமைகளையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது – ஜனாதிபதி

‘காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்றும், தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை (03) திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை – நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு நுவரெலியாவை கண்கவர் சுற்றுலாக் களமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்த பணிப்பு. நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக … Read more

மூடப்பட்டிருந்த கொழும்பு பதுளை (99) வீதியில் – ஒரு பகுதியைத் திறப்பதற்கு நடவடிக்கை

நேற்று மாலை மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதி, ஹப்புத்தளை -பத்கொட பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த இடம் இன்று காலை மீண்டும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரீட்சிக்கப்பட்டதுடன், வீதியின் ஒரு வழியைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மோசமான காலநிலையினால் ஹப்புத்தளை பாத்கொட பிரதேசத்தில் ஏற்பாட்டை மண்சரிவு காரணமாக, பதுளை கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டதுடன் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அவை மிகவும் அகலம் குறைந்ததாகவும், மரக்கிளைகள் நிறைந்தும் காணப்படுவதனால், அவதானத்துடன் … Read more

இராணுவ படை வீரர்களால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ படை வீரர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு குறித்த பயனாளிக்கு ஒப்படைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கடந்த 3ஆம் திகதி இடம் பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி குடும்ப அங்கத்தவர் ஒருவரை உள்ளடக்கிய பயனாளி ஒருவருக்கே இவ் புதிய வீடானது 07 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு … Read more

Batticaloa Campus இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து கற்கைகளை ஆரம்பிக்க உள்ளது

Batticaloa Campus , இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளது. இதன் ஆரம்ப விழா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இப்பல்கலைக்கழகத்தை நிறுவிய கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிசுல்லா அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (04) Batticaloa Campus வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், Batticaloa Campus உபவேந்தர், அதன் … Read more

இலங்கையில் உள்ள கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மீன் இறக்குமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையில் உள்ள கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மீன் இறக்குமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர் கடல் உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையில் தற்போது பல பிரச்சனைகள் காணப்படுவதாகவும் அவை ஆராயப்பட வேண்டும் என்றும் கூறியதுடன் வெளிநாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் தரமற்ற மீன்களை இறக்குமதி செய்து தயாரிக்கப்படும் மீன் ரின் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை தடை செய்வது மற்றும் ஐஸ் கட்டிகளுக்கு நியாயமான விலையை தீர்மானிக்க … Read more

33வது IMBL கூட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான 33வது வருடாந்த சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு (IMBL) சந்திப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள IMBL இல் INS சுமித்ரா கப்பலில் நடைபெற்றது என்று இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தூதுக்குழுவிற்கு வட மத்திய கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன ப பானகொட தலைமை தாங்கியதுடன், இந்தியக் குழுவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதி கட்டளை அதிகாரி ரியர் … Read more

பத்து புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் நேற்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு , பொலிவேரியன் குடியரசு,வெனிசுலா மற்றும் நோர்வே குடியரசு ஆகிய நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் கையளித்த புதிய தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு. 1- ஜூரிஸ் பொன் – … Read more

ஜனாதிபதி சகல பொறுப்புக்களையும் தாமாக ஏற்று நாட்டின் அபிவிருத்திக்காக செயல்படுகிறார் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மட்டக்களப்பு கெம்பஸ் ஸ்ரீலங்கா தனியார் கல்வி நிறுவனம் பொதுப் பயன்பாட்டின் பின்னர் மீளக் கையளிப்பதற்காக நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். மட்டக்களப்பு கெம்பஸ் ஸ்ரீலங்கா தனியார் கல்வி நிறுவனத்தை பொதுப் பயன்பாட்டின் பின்னர் அதன் உரிமையாளர் எம் எல் ஏ ஹிஸ்புல்லா விடம் நிறுவனத்தின் திறப்பை மீண்டும் கையளிக்கும் நிகழ்வு (4) மட்டக்களப்பு, புனானை யில் அமைந்துள்ள நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தனியார் … Read more

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவை ஜனாதிபதி சந்தித்தார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்த மாணவி தருஷி கருணாரத்ன நேற்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போது மாணவி தருஷி கருணாரத்னவும் வைபவரீதியாக அழைத்து வரப்பட்டார். தருஷி கருணாரத்னவின் பாடசாலை வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி விளையாட்டுப் பாடசாலையில் தடகள … Read more