பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும்

• வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 13 முதல் டிசம்பர் 13 வரை • நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12.00 மணிக்கு ஜனாதிபதியினால் வரவுசெலவுத்திட்ட உரை நிகழ்த்தப்படும் பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி … Read more

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கெளரவிப்பை அளித்தல் எனும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் தனது சான்றுரையை வழங்கியுள்ளார். இந்த சட்டமூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து நிறைவேற்றப்பட்டது. அத்துடன், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ … Read more

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 20வது ஆண்டு விழாவை 2023 ஒக்டோபர் 26 – 31 வரை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது. கிழக்கு தலைமையகத்தில் ஆசீர்வாதங்களை வேண்டி சர்வமத அனுஷ்டானங்களுடன் ஆண்டு விழா ஆரம்பமானது. அதேபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம், காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியின் மூலம் சமூக புலனாய்வு பிரிவு அமைக்க திட்டம்

தேசிய மாணவப் படையணியின் வருடாந்த ’ஹெர்மன்லூஸ், அணிவகுப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு மரியாதை அணிவகுப்பு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூக புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். மேலும், … Read more

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசியாவுக்கான தூதுக்குழுவினர் சபாநாயகருடன் சந்திப்பு

ஐரோப்பிய பாராளமன்றத்தின் பிரதித் தலைவர் ஹைடி ஹாட்டேலா தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தெற்காசியத் தூதுக் குழுவினர் (01) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தனவைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இந்த ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவில் போலாந்து, பின்லாந்து, ஜேர்மனி மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார். அண்மைக் காலத்தில் பல சாதகமான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஊழல் ஒழிப்புச் … Read more

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணைக்குழு நியமனம்!

முன்னாள் பிரதம நீதியரசர் பிரயசாத் டெப் தலைமையிலான 10 பேர் அடங்கிய குழு. நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி வெவகே பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 2,3 ஆம் சரத்துக்கமைய புதிய … Read more

இலங்கை – இந்தியா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் … Read more

மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்படுவதை தடுக்க கடினமானதாக இருந்தாலும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்

அடுத்த வரவு செலவு திட்டத்தில், சிறு மற்றும் மத்திய தர கைத்தொழில்களுக்கு வங்கிக் கடன் சலுகை தொடர்பில் அறிவிப்பு – தேசிய கைத்தொழில் விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. யாசகம் செய்யும் நாட்டுக்கு பதிலாக வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவது எந்த அளவு கடினமாக இருந்தாலும் அதற்கு அவசியமான தீர்மானங்களை தற்காலத்தில் உரிய வகையில் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் (01) நடைபெற்ற தொழிற்சாலைகளுக்கான, தேசிய கைத்தொழில் … Read more

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையின் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பு

பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தனியார் துறையினர் பாராட்டு. பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய விருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (01) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்திற்கான முன்னோடிப் பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்ட மறுசீரமைப்பு … Read more

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்க நடவடிக்கை

8400 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர அரச … Read more