மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்றுவதே நோக்கமாகும் – நாம் 200 நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்திய உதவியில் 10,000 வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல். இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அபிவிருத்தி … Read more

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு – ஜனாதிபதி

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த வருடத்தில் தான் காலநிலை செழிப்புத் திட்டத்தை முன்வைத்திருந்ததாகவும், இவ்வருடத்துக்கான COP 28 மாநாட்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் … Read more

மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதல் நோக்கம் – சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன

தற்பொழுது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களிடையே சுகாதாரப் பொறிமுறை தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதலாவது நோக்கம் என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகளுடன் (31) சுகாதார அமைச்சில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நாட்டின் சுகாதாரத் துறை ஒரு நிலையான சுகாதாரப் பொறிமுறை என்றும் இதில் அதை விட விசேட … Read more

இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் நேற்று (02) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் அபார தோல்வியைத் தழுவியது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக Shubman Gill 92 ஓட்டங்களையும், ஏசையவ Virat Kohli 88 ஓட்டங்களையும், Shreyas Iyer 82 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து … Read more

2023ஆம் ஆண்டில் செவ்விளநீர் ஏற்றுமதி 117% வீதத்தால் அதிகரிப்பு

செவ்விளநீர் ஏற்றுமதி 2023ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையாக அன்றி உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய … Read more

2022/23 பெரும் போகத்தின் போது விவசாயத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக, விவசாயிகளுக்கு ரூபா 17,82,360 நிதியுதவி

2022/23 பெரும் போகத்தின் போது விவசாயக் காப்புறுதி நட்டயீட்டை வழங்குவதை நோக்கில் வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுயானைகளின் பாதிப்பு போன்றவற்றிற்காக 24 நபர்களுக்கு ரூபா 17,82,360 வை நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் புத்தளம் மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது இடம்பெற்றது. 2022/23 பெரும் போகத்தின் விவசாயப் பாதிப்புக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 304 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 375.5 ஏக்கர்களுக்காக 62, 59,986 ரூபா நிதி அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைக்கு நடாத்தும் நடமாடும் சேவை – 2023

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைக்கு நடாத்தும் நடமாடும் சேவை – 2023 கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை – 2023, நாளை (4) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்/மட்/ பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.  

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்களின் அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (03.11.2023) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி நிலைய கலாசார மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்பப் பீடத்தின் பீடாதிபதி சிவமதி … Read more

இலங்கை விமானப்படை லாபுகஸ்தமன வனப்பகுதியில் விதை குண்டுகளை வீசியது

இலங்கை விமானப்படை (SLAF) தனது விதை குண்டுவீச்சு திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் 50 ஏக்கர் வனப்பகுதியில் 80,000 விதை குண்டுகளை வீசியது. கடந்த இருநாட்களில் (அக். 30 & 31) அனுராதபுரத்தில் உள்ள லாபுகஸ்தமன வனப் பகுதியில் இந்த விதை குண்டுகள் விமானப்படையின் MI – 17 ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் வீசப்பட்டது. நாட்டிலுள்ள வன அடர்த்தியை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை விமானப்படை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன … Read more

இலங்கை பரா தடகள வீரர்கள் நாடு திரும்பல்

அண்மையில் சீனாவின் ஹாங்சோநகரில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை பரா விளையாட்டு வீரர்களின் குழு திங்கட்கிழமை (ஒக்டோபர் 30) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு பணிப்பகத்தின் கேணல் விளையாட்டு கேணல் எச்.எம்.எஸ்.பீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இராணுவ ஒலிம்பிக் குழாமின் உதவிச் செயலாளர் லெப்டினன் … Read more