2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் பிரதி சபாநாயகரிடம் கையளிப்பு 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் என்பன கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்னவினால் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவிடம் (31) கையளிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டில் … Read more

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023நவம்பர் 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ … Read more

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பொதுமக்களிடம் கையளிப்பு

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது… உலக நகரங்கள் தினமான நேற்று (2023.10.31) நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அனுராதபுரம் பண்டுலகமவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர்- அனுராதபுர நகரத்தை ஜய ஸ்ரீ மஹா போதியின் நிழலின் கீழ்உள்ள உலகின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக … Read more

14வது ஆசிய குற்றவியல் மாநாடு 2023 இல் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

இரத்மலானையிலுள்ள ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடத்தில் நடைபெற்ற 14வது ஆசிய குற்றவியல் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் (அக் 29) கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வின் பிரதம அதிதியான பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு தம்மிக்க குமார வரவேற்றார். “குற்றம் மற்றும் குற்றவியல் நீதி: ஆசியாவில் நிலையான … Read more

2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது. அதன்படி, இந்த சனத் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டது. அத்துடன், தரவு சேகரிப்பிற்கு வழமையாக பயன்படுத்தும் அச்சிடப்பட்ட ஆவணங்களுக்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்பத்துடன் டெப் கணினிகள் மற்றும் இணையம் என்பன பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், புவி- இடம்சார்ந்த தொழில்நுட்பங்களாக, கணினி உதவி தனிநபர் நேர்காணலும் (CAPI- Computer Assisted Personal … Read more

நெருக்கடியிலிருந்து மீட்சி நிலை வரை: இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை பேச்சுவார்த்தை கொழும்பில்

பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (31) கொழும்பில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA), ஐக்கிய … Read more

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையினால் சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம் • தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார் • வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை பாரிய பிரச்சினை – சகல வைத்தியசாலைகளிலும் விரைவில் உரிய … Read more

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத்

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார். இந்த நாட்டிற்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹேரத் இதனைக் குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மேலும் … Read more

உயர்தர தேயிலை செடிகளை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருள் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்வதற்குத் தீர்மானம்

உயர்தரமான தேயிலைச் செடிகளை விவசாயத் திணைக்களத்தின் விதை விதி மற்றும் நடுகைப் பொருள் உற்பத்தி மத்திய நிலையங்களுக்கு ஊடாக உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்பான கலந்துரையாடல் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வின் தலைமையில் (28) இடம்பெற்றது. நாட்டின் கைத்தொழில் துறையில் காணப்படும் தேயிலை உற்பத்திக்காக புதிதாக செய்கையினை மேற்கொள்ளல், தேயிலைத் திட்டங்களை உருவாக்குதல் போன்ற தேவைகளுக்காக வருடாந்தம் 20 மில்லியன் தேயிலைக் கன்றுகள் தேவைப்படுவதுடன் உயர் தரத்திலான தேயிலைக் கன்றுகள் … Read more

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்.. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனியார் துறையினரின் சம்பள … Read more