அடுத்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு உதவியால் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் ஆரம்பிக்கப்படும்

வெளிநாட்டு உதவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது எந்த இடத்திலும் பாரியளவில் வீதிகள் அமைக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சரவைப் பேச்சாளர், வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் சேதமடைந்த … Read more

இலங்கையின் உலர் வலயத்தில் “காலநிலைக்கு உகந்த விவசாயத்துறை” அபிவிருத்தி குறித்து ஆராய உலக வங்கியின் பிரதிநிதிகள் களப்பயணம்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே (Anna Bjerde) மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் திறப்பனையில் உள்ள காலநிலைக்கு உகந்த விவசாயப் பயிற்சிப் பாடசாலைக்கு (FTS) (29)களப்பயணமொன்றை மேற்கொண்டனர். காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (Climate Smart Irrigated Agriculture Project -CSIAP) முன்னேற்றத்தை ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் … Read more

மன்னாரில் 623க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைபிரிவின் 542 வது காலாட் பிரிகேடின் முயற்சியின் பேரில் சனிக்கிழமை (ஒக்டோபர் 28) மன்னார் பிரதேசத்தின் 623 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ‘மனுசத் தெரண’ அனுசரணையுடன் வைத்திய முகாம்மொன்று நடாத்தப்பட்டது. மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்செயற்திட்டத்தின் போது மன்னார் வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் பார்வை குறைபாடுகள், தொற்றாத நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன் பார்வை பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் … Read more

பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ‘அஸ்வெசும வாரம்’ – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு … Read more

உலக வங்கிக் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே விஜயம் செய்தனர். இதன்போது உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, … Read more

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை

நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று வருடங்களாக தொழில்வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நேர்முகப் பரீட்சைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். அதற்கிணங்க குறித்த ஆட்சேர்ப்புத் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் … Read more

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நேரடி நடவடிக்கை

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிக்கட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற படகுகளை தரிப்பதற்கு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமையினால் பொது … Read more

34 ஆவது மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா – 2023

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதனை மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கலாராணி ஜேசுதாசன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி (மாவட்ட செயலாளர்) திருமதி நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களின் நெறிப்படுத்தல் மூலம் நடைபெறுகிறது. இதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச … Read more

T-10 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் நவம்பர் 10ஆம் திகதி

நாட்டின் கிரிக்கெட் களத்தில் புதிய அனுபவத்தை சேர்க்கும் வகையில், T-10 கிரிக்கெட் போட்டியின் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் நவம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டி டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இறுதிப் போட்டி அதே மாதம் 23 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியின் அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். ஆண்களுக்கான போட்டிக்கு நிகராக, உலகின் தலைசிறந்த பெண் … Read more