நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே வைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் –  ஜனாதிபதி

  கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (27) நடைபெற்ற “ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா” நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.   பாடசாலை கட்டமைப்புக்குள் முன்னெடுத்துச் செல்லப்படும் தரமான கல்வி முறைமையை பாராட்டிய … Read more

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது இலங்கை உட்பட வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாகும்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது இலங்கை உட்பட வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாகும் உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உலகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள், இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதிகரித்துவரும் மோதல்களால் மனித சமூகத்துக்கும், கிரகத்துக்கும் தாக்கம் … Read more

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக்கூட்டம் – 2023

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தினை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நடை பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) இடம் பெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவிர கலந்துகொண்டார். “மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்” எனும் தொணிப்பொருளில் … Read more

கிழக்கு மாகாணத்தின் காணிகள் சட்டரீதியாகவே விடுவிக்கப்படுகின்றன

இன, மதவாத அடிப்படையில் அநாவசியமான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார். அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படும் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற விசேட … Read more

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு ஒதுக்குவதே எமது இலக்கு!

2022 இல் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – வைத்தியர் அமைச்சர் ரமேஷ் பதிரண. இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எமது நாட்டின் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக … Read more

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க அவர்களின் சேவைக்கு பாராட்டு

உபகரண சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க ஆர்எஸ்பீ எடீஓ அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றும்செல்வதற்கு முன்னர் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதியின் கோரிக்கையின் பேரில் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான உரையாடல்களின் போது நேசத்துக்குரிய … Read more

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை … Read more

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடனான இலங்கையின் வர்த்தக தொடர்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன

அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான NTNC இன் வழிநடத்தலுடன் நிதி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களம், வணிக திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் இந்த தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான குழுவில் அங்கத்துவம் … Read more

போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்ல, டிஜிட்டலுக்கான மாற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டும்

அதற்கான திட்டம் எதிர்வரும் பட்ஜெட் உரையில் நாட்டுக்கு முன்வைக்கப்படும். டிஜிட்டல் மாற்றத்திற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் – தேசிய தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட உரையில் நாட்டிற்கு முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் … Read more