இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவைக்கு மின்சக்தி,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

  இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர … Read more

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்டத் தொழில் முயற்சி அமைச்சர் ஒருவரும் நியமனம். அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுகாதார அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அமைச்சிற்கு மேலதிகமாகவே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வைத்தியர் ரமேஷ் பத்திரன … Read more

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்க நடவடிக்கை

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்கவும் – பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு • அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பரிந்துரை • தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அதன் நோக்கங்களை … Read more

தூய்மையான குடிநீரை வழங்குவதற்காக ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் அனைத்து உதவிகளை வழங்க வேண்டும்

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கையின் பிரகாரம் குடிநீர் வழங்கலுக்காக பிரதம அமைச்சின் கீழ் தனியானதொரு செயலகம் நிறுவப்படும் என்றும் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 23ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, … Read more

ஜனாதிபதி தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில்

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவது அங்கீகரிக்கப்பட முடியாது. மோதல்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட ஐ.நா முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும் – ஜனாதிபதி வலியுறுத்தல். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையால் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை செலுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவதற்கும் உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால், இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை … Read more

இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கமாகும்!

  அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலுக்குத் தயார். ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்! அதற்காக கட்சி யாப்பில் திருத்தம் – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார் இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் … Read more

மட்டக்களப்பில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை 

    மட்டக்களப்பு மாவட்ட ஆயிரக் கணக்கான  மக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து  தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று  (21) மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்றது.  மாவட்ட செயலகம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து ஒழுங்குபடுத்திய இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு அவசியமான சேவைகளை கொழும்புக்குச் சென்று பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை  தவிர்க்கும் நோக்கில்  இந் நடமாடும் சேவை ஏற்பாடு … Read more

இலங்கை – சீன அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

  • நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – சீன ஜனாதிபதி உறுதியளிப்பு. நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய … Read more