மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பு

மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பு மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சில பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக நாம் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய பிரதானிகளிடம் நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், … Read more

அரசாங்க ப் பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை முன்னேற்றுவதற்காக நிதியுதவி – கல்வி அமைச்சர்

அரசாங்கப் பாடசாலைகளுக்கான போசாக்கு உதவி நிதியம் – கல்வி அமைச்சர் கடந்த 76வருடங்களாக இலங்கை அரசாங்கம் முதலாம் தரத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகின்றமை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 300 சர்வதேச பாடசாலைகள் ,110 தனியார் பாடசாலைகள் என்பன உட்பட 10,135 அரச பாடசாலைகளில் இலவச கல்வி வழங்கப்படுகின்றது. இலவச கல்வியைப் பெறும் 4.1மில்லியன் மாணவர்களுக்கு இலவச பாடநூல், பாடசாலை சீருடை போன்றவை வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் பெரிஸ் நகரில் இடம் … Read more

உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் – சீனாவில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும்,  உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த  நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட … Read more

இரண்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி

புதிய உயர்ஸ்தானிகர்கள் இருவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அதற்கமைய, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வுபெற்ற) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவை நியமிப்பதற்கு, கியூபா குடியரசின் இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதன்னவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக எயர் … Read more

இலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கிவைப்பு

இலங்கை இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினர் (ஒக்.15) இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர். முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தை தானம் செய்ய 64வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் 90 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்கியதாக இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. 641, 642, மற்றும் 643 வது காலாட் பிரிகேட் மற்றும் 8வது இலங்கை பீரங்கி படையணி, … Read more

கொக்கட்டிச்சோலையில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் புதிய ஆயுர்வேத வைத்திய சாலை பிரதேச மக்களின் தேவை கருதி நேற்று (19) திகதி திறந்து வைக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை சிகிச்சை வழங்கும் நோக்கில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.சுகுணன் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகள், பிரதேச மக்கள் எனப் பலர் பங்கேற்றனர். … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

உயர்மட்ட சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி பேச்சு

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (19) சீன தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மத்தியஸ்தானமாக மாற்றியமைத்தல், துறைமுக நகரத்திற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்குதல், துறைமுக நகரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மற்றும் வழிக்காட்டல் முறைமைகளை உருவாக்குதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. … Read more

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உயர்தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்

இலங்கையில் தகவல் தொழிநுட்ப துறையில் வருடாந்தம் இருபதாயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அந்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் சுமார் பத்தாயிரம் தகவல் தொழிநுட்ப துறைப் பட்டதாரிகள் வெளியேறுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எஞ்சிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரத்தில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொழிநுட்ப தொழிற்துறை சம்மேளத்தின் கல்விப் … Read more

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார். இந்நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை நாட்டில் சேமிக்க முடியும் என … Read more