பாதுகாப்பு படை வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டான பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு பாராளுமன்றத்தில்.
உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் நினைவான பொப்பி தினத்தினை முன்னிட்டு பாராளுமன்றத்தில் (18) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இதற்கமைய இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவுக்கு பொப்பி மலல் அணிவிக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து பிரதமர் குறித்த சங்கத்துக்கான நிதி ஒத்துழைப்பை வழங்கினார். அதன் பின்னர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. … Read more