வதிவிடங்களை அண்டிய ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு!

கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் வதிவிடங்களை அண்டிய பகுதிகளில் ஆடு வளர்க்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட எட்டு குடும்பங்களுக்கு ஆடுகள் நேற்று (16) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.  இதன்போது பயனாளி ஒருவருக்கு மூன்று ஆடுகள் வீதம் 24 ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 33 பயனாளிகளும், கண்டாவளை பிரதேச செயலர் … Read more

மட்டக்களப்பில் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெருக்க மரம் வெட்டி அகற்றப்பட்டது!!

நாட்டில் அண்மைக்காலமாக நிலவிவரும் காலநிலை மாற்றத்தினால் பல இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுவருவதுடன் அண்மைய நாட்களில் வீதியோர மரங்கள் முறிந்து வீழ்ந்ததனால் பல உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க அரசாங்கம் அனர்த்த நிலையினை கருத்திற்கொண்டு வீதியோரங்களில் முறிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்கான பணிப்புரையினை தேசிய ரீதியில் விடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்படும் பாரிய மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மண்முனை … Read more

சீன முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக இலங்கை முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார். சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (16) பிற்பகல் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். … Read more

சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம்

இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து. இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் பிரதித் தலைவர் சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார். தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ … Read more

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 11 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும், ‘Brunswick’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கப்பலின் பணியாளர்கள் இலங்கையில் சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர்.

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI BIMA SUCI – 945’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 14 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் பயிற்சிக் கப்பல் ‘KRI BIMA SUCI – 945’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர். மேலும், ‘KRI BIMA SUCI – 945’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த … Read more

94 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் (2023 ஒக்டோபர் 16) அதிகாலை தலைமன்னார், ஊறுமலை கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine), ஒரு (01) கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐந்து (5) கிலோகிராம் ஹஷிஸ் 05) கொண்ட டிங்கி படகொன்று (01) கைப்பற்றினர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து பல நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி … Read more

01 கிலோவுக்கும் அதிகமான TNT உயர் வெடிபொருட்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் இன்று (2023 ஒக்டோபர் 17) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு (01) கிலோகிராம் TNT உயர் வெடிமருந்துடன் மூன்று (03) அடி நான்கு (04) அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டன. வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தின் கடற்படையினர் இன்று (17 அக்டோபர் 2023) யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் … Read more

செயிட் அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரான செயிட் அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (17) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்தது. அந்தத் தீர்மானத்துக்கு எதிராக அவரால் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவை 2023 ஒக்டோபர் 06 எ திகதி உயர் நீதிமன்றத்தினால் … Read more

கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு, பிரமந்தனாறு, உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், இவ்வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக குறித்த பகுதிகளில் ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடை செய்யாது கைவிட்டுள்ள நிலையிலும், தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலை … Read more