தனுஷ்க குனதிலக மீது சுமத்தப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனுஷ்க குனதிலக மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவரது கிரிக்கெட் நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்வதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தனுஷ்க குனதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் … Read more

சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு முறைமையொன்று அவசியம்

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார் சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் நோக்கில் அல்லது பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டு … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 15ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி … Read more

DigiGo.lk உடன் 2030 ஆம் ஆண்டாகும்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிடல் மயப்படுத்த திட்டம்

டிஜிட்டல் இலங்கைக்கான மூலோபாய செயல்முறைக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான தொழில்நுட்ப உதவி. ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட “டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறை” உலக வங்கியின் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுள்ளது. இதன்படி, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாக, இலங்கை தகவல் … Read more

கிளிநொச்சி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்(NISD) கிளிநொச்சி பிராந்திய நிலையத்தால் சமூகப் பணி பட்டப்படிப்பு மற்றும் உளவளத்துணை டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 021 2283044 என்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானத்தின் (NISD)கிளிநொச்சி பிராந்திய நிலைய தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது (NISD) இலங்கையில் சமூகப்பணி கல்வியை வழங்கும் முன்னோடியாள் நிறுவனமாகும். இது மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்று சமூக வலுவூட்டல் அமைச்சின் … Read more

குளங்கள் புனரமைப்பு உட்பட சுமார் 4 கோடி ரூபாய் செலவில் வாகரையில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி மக்களிடம் கையளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் வியாழக்கிழமை (12.102.2023) இடம்பெற்றன. “எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்திற்கு அமைவாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு … Read more

கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில் நீதியாக தீர்த்து வைக்கப்படும்

கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில் நீதியாக தீர்த்து வைக்கப்படும் என்று காக்கைதீவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். காக்கைதீவு மற்றும் சாவற்காட்டு கடல் தொழிலாளர்களுக்கு இடையே தொடர்ச்சிய படகு கட்டும் இறங்குதுறை மற்றும் இரண்டு சங்க கடல் தொழிலாளர்களுக்கு இடையே கடலுணவுகள் கூறுவிலை கோரல் விடயத்தில் ஏற்படும் பிணக்கால் சந்தையை பிரிப்பது போன்ற பிரைச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு குறித்த சங்கங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காக்கைதீவுக்கு நேரில் … Read more

வடக்கு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி…

வடக்கு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை சாத்தியமாக்கியது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, விரைவில் சரக்கு கப்பல் சேவையும் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வருகை தந்த முதலாவது பயணிகள் கப்பலை வரவேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் … Read more

உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு, தசுனுக்கு பதிலாக, சாமிக களமிறங்கவுள்ளார்

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக காயம் அடைந்துள்ளார். இந்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது தசுனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. தாசுனின் இயலாமை காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். தசுனுக்குப் பதிலாக இலங்கை அணியுடன் இந்தியா சென்றுள்ள சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்னவை இணைத்துக் கொள்ள உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (15) இரவு சீனாவிற்கான உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று(16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார … Read more