அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, புத்தி ஜீவிகள் வெளியேற்றம் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 08 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பரிந்துரைகளை கையேற்றதுடன், உரிய பரிசீலனைக்கு உட்படுத்துவதாகவும் குறிப்பிட்டதோடு, சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் மீண்டும் … Read more

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ​நோக்கமெனவும் தெரிவித்தார். மேற்படி கல்வி … Read more

ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை இந்நாட்டில் உருவாக்கத் திட்டம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

  ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை இந்நாட்டில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இதற்காக பிங்கிரிய மற்றும் இரணைவில ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, “தற்போது துறைமுக நகரம் … Read more

உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்து

  உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில் (13) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதன் தற்போதைய போக்குகள் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விளக்கமளித்தார். பல்வேறு … Read more

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

  விவசாய அமைச்சர் கெளரவ மகிந்த அமரவீர அவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒருகட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர். மாவட்டச்செயலகத்தில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டு காலப்பகுதிகளில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளாகி பயிர் அழிவினை எதிர்கொண்ட விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கிவைத்திருந்தார். 2022, 2023 காலப்பகுதியில் … Read more

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலையொன்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 13ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் (10) இடம் பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கையர்களின் 213 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது. இதில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர … Read more

காலி உரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு காலியில்

இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் இணைந்து பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்கின்ற காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இம் முறை இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட பிரத்தியேக அதிதிகளின் பங்குபற்றுதலுடன் 2023 ஒக்டோபர் 12ஆம் திகதி காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளதுடன், அன்று முதல் இரண்டு நாட்களாக (அக்டோபர் 12-13, 2023) இந்த … Read more

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு (2023 ஒக்டோபர் 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Spearhead-Class Expeditionary Fast Transport வகையின் கப்பலான ‘Brunswick’ நூற்று மூன்று (103) மீட்டர் நீளமும், மொத்தம் இருபத்தி நான்கு (24) கடற்படையினரயும் கொண்டுள்ளது மற்றும் ANDREW H PERETTI (Captain ANDREW H PERETTI ) கப்பலின் கட்டளை அதிகாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்கிரார். மேலும், ‘Brunswick’ என்ற கப்பல் … Read more

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் கலந்துரையாடல்

புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று (அக். 11) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது. மனித உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது, அவசரகாலச் சூழ்நிலைகளின் போது மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றிப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதன் போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. புறநகர் பகுதிகளில் … Read more