இந்திய வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்…
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11.10.2023) கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் இலங்கை சார்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்; அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும், இந்தியாவின் சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர். அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. பதுளை, மாத்தளை … Read more