சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பில் பல் துறைசார் குழு பரிந்துரைகள் முன்வைப்பு. இந்நாட்டு சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முழுமையான நலன்புரிகள் தொடர்பில் பரந்த ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்மொழிவதற்காக 2023 ஏப்ரல் 19 ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் … Read more

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் சூரிய சக்தியினால் 3000 மெகா வோட்ஸ் மின்சாரம்

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் 3000 மெகா வோட்ஸ் சூரிய சக்தி மற்றும்; 1000 மெகா வோட்ஸ் சுழல் சக்தியினால் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் அரசாங்கத்தின் இலக்கு என்றும் அதற்காக 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை வழங்கும் இலக்கை அடைய முடியும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ஜயசேகர (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின் பட்டியலைக் குறைப்பதற்கு மற்றும் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஏற்படும் செலவையும் இதனால் குறைக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு … Read more

கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதத்தில்…

கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இப்பரீட்சைக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாது போன விண்ணப்பதாரிகளுக்காக … Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அபாயம் உள்ள ஏனைய மாவட்டங்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு. கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார். … Read more

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி இன்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார். மேலும், மாணவி தருஷி கருணாரத்ன … Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை நோர்வே தீவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மற்றும் ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் ஒரு டிங்கி படகு (01), ஒரு லொறி வண்டி (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத … Read more

2024 ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் வாய்ப்பு உள்ளது – அமைச்சர் நளின் பெர்ணான்டோ

இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் பொருளாதார சுருக்கத்தைக் குறைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளதன் படி, 2024 ஆம் ஆண்டு 1.8% அல்லது 1.9% வரையிலான சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நளின் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார். இங்கு … Read more

2030 ஆம் ஆண்டளவில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எரிபொருளால் அன்றி மின்சாரத்தினாலேயே இயங்கும்

தற்காலத்தில் உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக 2030ஆம் ஆண்டளவில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டி, வேன், பஸ் மாத்திரமன்றி புகையிரதம் மற்றும் சகல பொதுப் போக்குவரத்து வாகனங்களும் எரிபொருளின்றி மின்சாரப் பயன்பாட்டினால் இயங்குபவைகளாக காணப்பட வேண்டும் என்பதற்கு உலக நாடுகளில் மாநாடுகள், கலந்துரையாடல்கள், மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான … Read more

சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர்

கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்க வைத்திய சாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் அறிவித்தலுக்கு இணங்க விசேட உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கான அனுமதி 27வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனெனில், தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருவதே இவ்வதிகரிப்பிற்கான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதனால் வைத்தியசாலைகளில் … Read more

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் விரிவான திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர

நாட்டின் சனத்தொகையில் 2% மாத்திரம் உள்ள தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் 5 வருடங்களில் 10% ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை கல்விகற்றுவிட்டு முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரிபவர்களுக்கு, இரண்டாம் நிலை தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக … Read more