ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு ஜனாதிபதி வழங்கிய விசேட நேர்காணல்

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இராணுவ வீராங்னை ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம்

சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 17 வருடங்களின் பின்னர் இலங்கையின் புதிய சாதனையுடன் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் நதீஷா லேகம்கே ஈட்டி எறிதல் போட்டியில் 61.57 மீட்டர் திறன் வெளிப்பாட்டுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 45 உறுப்புரிமை கொண்ட ஆசிய ஒலிம்பிக் பேரவையின் 12,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள், சீனா ஹங்சோவில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர். இராணுவத் … Read more

புதிய வர்த்தக உயர் நீதிமன்றமொன்றை நிருமாணிப்பதற்கு அனுமதி

புதிய வர்த்தக உயர் நீதிமன்றமொன்றை கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, இல. 80 இல் நிருமாணிப்பதற்கான நீதிமன்ற, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அபிவிருத்தி இலக்கை நோக்காகக் கொண்டு நாட்டில் மிகவும் சிறந்த நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டு வர்த்தகக் காரணிகள் தொடர்பாக தற்போது காணப்படும் அதிகரித்த வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாகத் தீர்த்து முடிவுறுத்துவதற்காக புதிய வர்த்தக நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் கோரிக்கை … Read more

சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை – அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன

சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, அதனால் சமூகத்தை நேர்வழியிலிருந்து திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது “சமூக … Read more

தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்தி, “கல்வி தொடர்பான பல்கலைக்கழகம்” ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை

இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். அவ்வாறே தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக முன்னேற்றுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய புதிய நெறிமுறைமைகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2019.12.04 திகதி அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு சிரேஷ்ட … Read more

வீடற்றவர்களுக்காக 3044 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்துள்ள இராணுவத்தினர்

2009 ஆம் ஆண்டு முதல், வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்ட ஒரு இதயப்பூர்வமான முயற்சியை இலங்கை கண்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சி, தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டின் உணர்வை வளர்ப்பதற்கும் இராணுவம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இன்றுவரை, இராணுவம் நாடு முழுவதும் மொத்தம் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளது, மேலும் 22 வீடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ஏழை மக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டு … Read more

சர்வதேச உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டுமா அல்லது நாட்டின் சட்டத்தின்படி செயல்படுவதா என்பது பற்றி சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்

எட்மண்ட் ரணசிங்க, இந்த நாட்டில் பத்திரிகைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய திறமையான ஊடகவியலாளர்- எட்மண்ட் ரணசிங்க கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. அவரின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியைப் போற்றும் வகையில் தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் பத்திரிகைப் புரட்சி’ புத்தகம் வெளியிடப்பட்டது. சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்; 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.  மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி … Read more

ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் … Read more