நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்

“நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் மைல் கணக்கில் மின்கம்பிகளை இழுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.” – பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (02) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் … Read more

மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி

மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பரவலாக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தனவின் கோட்பாட்டிற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படவுள்ள, மக்களிடையே மின்சார வாகனங்களை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், போக்குவரத்து அமைச்சின் கீழ் கிராமமொன்று தெரிவு செய்யப்பட்டு பசுமை கிராமமாக அபிவிருத்தி செய்யும் கோட்பாட்டின் கீழ் ஹோமாகம, பிடிபன … Read more

சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான எட்மண்ட் ரணசிங்க விருது வழங்கல் விழா இன்று ஜனாதிபதி தலைமையில்

இந்நாட்டின் சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான “திவயின” பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (03) மாலை 3.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நாட்டின் பத்திரிகை துறையில் விலைமதிப்பற்ற பணிகளை மேற்கொண்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது வாழ்வில் 93 ஆவது வயதை எட்டியிருக்கும் ரணசிங்கவின் … Read more

இன்று (03) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இன்று (03) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறுவர் தின வாழ்த்துச் செய்தி நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து வருகின்றோம். மேலும், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். அதற்கேற்றவாறு சிறுவர்களை, புதிய தொழில்நுட்ப அறிவு, செயற்திறன்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமநிலையான ஆளுமை கொண்ட, பயன்மிக்க பிரஜைகளாக சமூகமயமாக்க கல்வி முறையில் பல்வேறு … Read more

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார். அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு … Read more

சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது! -கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்-

சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது! -கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்- இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை செய்யப்படல் வேண்டும் எனறு தனது சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சிறுவர்கள் … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

  இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் வருடத்திற்கான 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரமின் ஒழுங்கமைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞபாகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா. செல்வராஜா தலைமையில் பட்டதாரிகளின் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு, உறுதிசெய்யப்படும் பொதுப் பட்டமளிப்பு விழா நடாத்தப்படவள்ளது.இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென்ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னனி பொருயிலாளரும், மனித அபிவிருத்திக்கான … Read more

இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒக்டோபர் 3ஆம் திகதி  பொதுமக்கள் பார்வையிடலாம்  

    இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42ஆவது வருடத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரம் (27) பல்கலைக்கழக சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இப்பல்கலைக்கழக வாரத்தை விசேடமாகக் கொண்டாடும் நோக்கில் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக பிராந்தியத்திலுள்ள சமூகத்தினருக்காக எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமையினை திறந்த நாளாக நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. … Read more

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more