பாராளுமன்றம் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடும்

  • பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்தை எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் … Read more

பதுளை தமிழ்மொழி மூல பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களின் பங்களிப்புடன் ‘பாராளுமன்ற அறிவகம்’ விசேட நிகழ்ச்சி

  பதுளை மாவட்டத்தில் 26 தமிழ்மொழி மூல பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களின் பங்களிப்புடன் பண்டாரவளையில் ‘பாராளுமன்ற அறிவகம்’ விசேட நிகழ்ச்சி பதுளை மாவட்டத்தில் உள்ள 26 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரின் பங்களிப்புடன் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு, தேசிய ஜனநாயக நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில், எதிர்காலத்தின் … Read more

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரலாம்

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் … Read more

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு … Read more

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய திட்டமிடலுக்கான வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம்

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய திட்டமிடலுக்கான வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் “பேர்லின் குளோபல்” முதல் நாள் நிகழ்வின் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பு. 2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள … Read more

நாட்டின் சில பாகங்களில் 100 மி.மீ அளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மி.மீ அளவு பலத்த … Read more

நபிகளாரின் வாழ்க்கைத் தத்துவத்தை சமூக நலனுக்காக பயன்படுத்துவோம்

மனிதநேயம் நிரைந்த உயர்ந்த மானுடப் பெறுமானங்களை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபிகளாரின் பிறந்தநாளை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் சமயக் கிரியைகளுடனும் கொண்டாடும் இவ்வேளையில், அவர் போதித்த வாழ்க்கைத் தத்துவத்தின் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அவரை கௌரவிப்பதற்கான சரியான வழியாகும். சுபீட்சம், விடுதலை, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றைக் கொண்டு வரும் ஒரு முழுமையான வாழ்க்கை முறையை மனித குலத்திற்கு வழங்கிய நபிகளாரின் மனிதாபிமான வாழ்க்கைத் தத்துவத்தை சமூக நன்மைக்காக முன்னெப்போதையும் … Read more

“பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜேர்மனி பயணம்

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இம் மாநாடு பல நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் செப்டெம்பர் 28 – 29 ஆம் திகதிகளில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் முதல் நாளன்று அரச தலைவர்கள கலந்துரையாடலில் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf … Read more

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் … Read more

தென்கொரியாவில் ஊடவியலாளர்கள் சிலர் AIJ பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தினால் (KOICA) முன்னெடுக்கப்படுகின்ற இலங்கையில் ஊடகத்துறைக்கு செயற்றை நுண்ணறிவினை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிநெறியொன்று தென்கொரியாவில் இரண்டு வாரங்களாக நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர்கள் 15 பேர் குறித்த பயிற்சி நெறியில் பங்குபற்றினர். அதன்போது தெரிவு செய்யப்பட்ட மூன்று தலைப்புகளில் மூன்று செயற்பாட்டு திட்டங்களும் அவர்களால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொய்க்கா நிறுவனமும், தென்கொரியாவின் ஹெங்யாங் பல்கலைக்கழகமும் இணைந்து முன்னெடுத்த இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு தென் கொரியாவின் உயர் … Read more