அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய விரிவான தேசிய சமூகப் பாதுகாப்பு முறை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தலைமைத்துவம் வகிக்கும் அனைத்து துறைகளிலும் தொழில் புரியும் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவான தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பு முறையை தயாரிப்பதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு செயல்பட்டு வருகிறது. தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவான சமூகப் பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தி, இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு முறையைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, வரையறுக்கப்பட்ட சில துறைகளை மாத்திரம் உள்ளடக்கிய சிறிய … Read more

அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium – ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். அங்கு, அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் துணைத் தளபதி, அட்மிரல் Lisa M. Franchetti, அமெரிக்காவின் … Read more

கிளி. பொன்னாவெளி டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) செவ்வாய்க்கிழமை மாலை 3.00மணிக்கு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பொன்னாவெளி டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை மற்றும் நீர் வளசபையின் ஆய்வறிக்கை காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. தொடர்ந்து, பொன்னாவெளி டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய … Read more

2048 – பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு ஜனாதிபதிக்கு பல நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது

மேலும் பல நாடுகளுடன் ஜனாதிபதி சாதகமான பேச்சு – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைகளின் பலனாக குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்துக்கொள்ள அந்த … Read more

நாட்டின் தென்மேற்கு பகுதிகளுக்கு இன்று (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்கு பகுதிகளுக்கு இன்று (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ … Read more

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்

அதன் கீழ் முதலீட்டுச் சபையை பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்கவும் நடவடிக்கை – ஜனாதிபதி. இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி … Read more

அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதாரம் மற்றும் … Read more

நாட்டின் சில பாகங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர்26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு … Read more

ஆசிய – பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் ஒக்டோபர் 03 – 06 வரை கொழும்பில்

பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய – பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் (UNEP) ஒக்டோபர் 03 – 06 திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார். அதன் பிரதான அமர்வு ஒக்டோபர் 05 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதோடு, ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சுற்றாடல் அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள குறித்த நிகழ்வில் பிராந்தியத்தின் சுற்றாடல் … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் இன்று கையொப்பம் இடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.  கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வி துறையை மேலும் மேம்படுத்தும் … Read more