‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 03 முதல் 05 வரை BMICH இல் நடைபெறும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 03 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக … Read more

கிளிநொச்சியில் மீண்டும் மணல் வினியோகத்திற்கு அனுமதி

எதிர் வரும் (02.10.2023) திங்கட்கிழமை முதல் மீண்டும் மணல் வினியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமாக மண் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு வாரகாலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட மணல் வினியோகம் துறைசார் தரப்பினரின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்சமயம் மணல் வினியோக விடயத்தில் ஏற்பட்டுள்ள அவசியம் … Read more

அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட“The Right Eye” (வலது கண்)எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

உலகளாவிய தொழிலாளர் இயக்கத்துடன், இலங்கையில் தொழிலாளர் இயக்கமும் நவீனமயமாக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா (24) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்நூலின் முதற்பிரதியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

சீனாவில் நேற்று (25) நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இந்தியா 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தையும் இலங்கை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பாக Smriti Mandhana … Read more

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் நாட்டுக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வெற்றிகரமான விஜயமாகும் – ருவன் விஜேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும் , இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஏனைய உலக வல்லரசுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ருவன் விஜயவர்தன இதனைத் தெரிவித்தார். … Read more

உலகளவில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான இலக்குகளை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது… – பிரதமர் தினேஷ் குணவர்தன

இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக முன்னோக்கிச் செல்லும் அதேவேளை, உலகெங்கிலும் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான இலக்குகளை மேம்படுத்துவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை சங்கத்தினால் 2023.09.23 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவின் 77வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர், ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியா பொருளாதார அபிவிருத்தியில் முன் நிற்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி … Read more

ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இடம்பெற்ற சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க … Read more

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும்.

அந்த இலக்கை அடைவதற்கான நம்பிக்கையும் ஆதரவும் இலங்கை மக்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன் – ஐ.நா கூட்டத்தொடரில் ஜனாதிபதி வலியுறுத்தல். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார். அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை மக்கள் மற்றும் … Read more

அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார். முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி … Read more

சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கை தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும்

சீதாவக்கயின் பெருமையை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – ஜனாதிபதி. துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவக்க ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்ட விடயமொன்றினால் வரலாற்றிலிருந்து இராஜசிங்க மன்னன் மறக்கடிக்கப்பட்டுள்ளார். போரில் வெற்றி பெற்றவர்களை ஒதுக்கி போரில் தோற்றவர்களை மாவீரர்களாக்கிய வரலாற்றை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 12,000 பாடசாலை … Read more