தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம் ஒக்டோபர் 11-13 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்

தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு 2023 ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தகவல் தொழில்நுட்ப தொழில் முயற்சிகளை ஊக்குவித்தலுக்காக புதிய தொழில்நுட்பம் தொடர்பில் அறிவை பெற்றுக்கொடுத்தல். திறன் விருத்தி, தொழில் ஆலோசனைகள் மற்றும் தொழில் … Read more

சில அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்

வளர்ந்து வரும் நாட்டை இனவாத நெருக்கடிக்குள் தள்ளிவிட வேண்டாம் – ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய. நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். முப்பது வருட யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக நாடு அரசியல் பொருளாதார ரீதியில் சரிவடைந்து கிடந்த நிலையில், தற்போது ஓரளவு முன்னேற்றம் … Read more

ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (25) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சூ (ர்யபெணாழர) கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர்; … Read more

நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்டுத்துவது தொடர்பில் அவதானம்

சுற்றாடல் மற்றும் கடல்வள பாதுகாப்புக்கு புதிய சட்டம் – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ. இந்நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். கனிய வளங்களை பாவனை செய்து மேற்கொள்ளும் உற்பத்திகளுக்கு உயர் பெறுமதியை வழங்க முடியும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக … Read more

மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்தது – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன

• நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடலும் இன்றி கடன் மீள செலுத்துவதை கைவிட்டனர் – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் • நிதி வங்குரோத்து நிலையை அறிவித்தமை, நீண்ட … Read more

மூன்றாம் போக சிறுதானிய விதைப்பில் தாம் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற்றுள்ளதாக பாவற்குள விவசாயிகள் மகிழ்ச்சி.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயளாலர் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் யுனிட் 4,5,6 ​பகுதியில் மூன்றாவது போகமாக விதைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருக்கும் விளைநிலங்களை மாவட்ட செயலாளர் இன்று பார்வையிட்டார் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 45 விவசாயிகள் இணைந்து உளுந்து, கௌப்பி, பயறு போன்ற சிறுதானியங்களை பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெற்றுள்ளனர். குறித்த போகத்திற்கு தேவையான நீரை தாம் செட்டிக்குளம் பெரிய நீர்ப்பாசன திணைக்கள அனுசரணையின் கீழ் பெற்றுக் கொண்டதாகவும் தகுந்த காலத்திற்கு கிடைத்த அறிவுரை மற்றும் சரியான காலஇடைவெளியில் … Read more

அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்

அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் அமைப்புக்கள் மத்தியில் தெரிவிப்பு • அங்கவீனமானவர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை – துறைசார் மேற்பார்வைக்குழுவில் பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் … Read more

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென்; மாகாணங்களில், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் … Read more

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடரையொட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றார். ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி: நடவடிக்கை மற்றும் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சீனாவின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் தலைமையில் நடைபெற்றது. உலக அபிவிருத்திக் கூட்டாண்மைகளுக்கு புத்துயிரளிப்பதன் மூலமும், வலுவான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான … Read more

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு

வலயத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற இலங்கைக்கு உதவ மலேசியா தயார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு (20) நியூயோர்க்கில் நடைபெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த பிரதமர் அன்வர் … Read more