கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் (திருத்த) சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

• மீனர்களுக்கு ஏற்படும் விபத்துக்களின் போது அவசர அழைப்பு சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்) சட்டமூலத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியது. உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

உத்தேச IMF பொருளாதார மறுசீரமைப்புக்களை செயற்படுத்தியிருப்பது தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று முதல் இரு வார காலத்துக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் அதன் இறுதி அமர்வு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறும். இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தேசிய … Read more

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்; முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது – கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்த … Read more

சாகல ரத்நாயக்க நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (13) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று புதன்கிழமை காலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமானது. தேர் வீதி உலா வருவதை பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார். பின்னர் ஆதீனத்தில் இந்துமத தலைவர்களையும் … Read more

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் நேற்று (14.09.2023) இடம்பெற்றது. இ.தொ.காவின் சர்வதேச விவகார பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. … Read more

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியவற்றிற்கு சபாநாயகர் சான்றுரை…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலங்கள் ஆகியவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தை இட்டு இன்று (14) சான்றுரைப்படுத்தினார். இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி குழுநிலையில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி ஜூலை மாதம் 21ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 16 … Read more

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்!  – கிழக்கு ஆளுநர் அறிவுரை

திருகோணமலையில் (13/09/2023) அன்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை நேற்று (14/09/2023) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், … Read more

தலைமன்னாரிலிருந்து மீன்பிடிப்பதற்கு படகில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர். மேலும் குறித்த மீனவர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி படகு ஒன்றை கைதுசெய்துள்ளனர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, (2023 செப்டம்பர் 13) அதிகாலையில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், ககரதீவு மற்றும் கோவிலன் கலங்கரை விளக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினேழு (17) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் … Read more