மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வு, நிகழ்ச்சி நிரல் 2 – பொது விவாதம்

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான மாண்புமிகு ஹிமாலி அருணதிலக்க அவர்களின் அறிக்கை 2023 செப்டம்பர் 13 தலைவர் அவர்களே, இந்த சபை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியானது உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை, ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொள்கைகளால் வழிநடத்தப்படல் வேண்டும் என்பதே தீர்மானங்கள் 60/251 மற்றும் 48/141 இன் தேவைப்பாடாகும். துரதிஷ்டவசமாக, இலங்கையைப் … Read more

இந்து சமுத்திர வலயத்திற்கான இலங்கையின் தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டது

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் அடிப்படையில் பல புதிய திட்டங்கள் – சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கான, வலுவான மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சி நிகழ்ச்சி நிரல்களுடன் இலங்கையை இந்து சமுத்திர வலலயத்திற்கு உயர்வான இடத்திற்கு கொண்டுச் செல்ல அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் … Read more

கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “Alfred House Wing” புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக மாத்திரமின்றி ஒரு நிறுவனமாக டேர்டன்ஸ் வைத்தியசாலையினால் நாட்டுக்கு கிட்டும் கௌரவமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலகின் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப முன்னோக்கிச் செல்லுமாறு டேர்டன்ஸ் வைத்தியசாலையிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை இலங்கை அணுக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். புத்தாக்கம் மற்றும் தொழிநுட்ப சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை மையமாகக் … Read more

செப்டெம்பர் 21 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து மூன்று (2223) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை … Read more

கடல்சார் பேரழிவுகளுக்கு பதிலளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடல் மற்றும் மீட்பு பணி மற்றும் கடலில் ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்கும் திறன் தொடர்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் கடற்படையின் துணைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 செப்டம்பர் 06 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடலொன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கடல்சார் … Read more

காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் பிரிகேடியர் எம்.பி.கே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 8) கடமைகளை பொறுப்பேற்றார். அங்கு வந்தடைந்த அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டதுடன் பல சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில் தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார். பிரிகேடியர் எமபீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ இந்த … Read more

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

2009ம் ஆண்டிற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் மூன்று றூட் ஒன்பது பேஜ் காணி இன்று(14) வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பொது காணிகள், மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த காணி பாடசாலை பயன்பாட்டுக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போ சத்தியில் அமைந்துள்ள யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் அமைந்துள்ள காணியே இன்று இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. … Read more

தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை

போக்குவரத்து சபையில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாணவர்களை உள்ளீர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாணவர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாளக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் கூடிய வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து … Read more

வடக்கில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு…

கடந்த கால யுத்தம் காரணமாக ,டம்பெயர்ந்து மீண்டும் குடியேறியுள்ள கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சுமார் 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. ,வற்றில் முதல் கட்டமாக நேற்று (13) ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், கோரக்கன் கட்டு கிராமத்திலும் ,ரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து … Read more