தகுதியான தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் நேற்று (13.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்த நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு … Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி … Read more

திறமைகாட்டிய உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

ஜனாதிபதியின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கிவைப்பு. 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. திறமையான மாணவர்களுக்கு ஜனாதிபதியின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பன ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, 2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குத் தெரிவான 60 மாணவர்களும், … Read more

விரைவில் தேசிய கல்விக் கொள்கையொன்று அறிமுகம்

பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ. இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை … Read more

புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (12) வெளியிட்டார்.அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது  

'800' திரைப்படத்திலிருந்து தோட்டக்காட்டான் என்ற வசனம் நீக்கப்படும்

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார். நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால்; விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘800’ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது, இதில் நடிகர் நாசரால் ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனம் உச்சரிக்கப்படுகின்றது. இந்த சொல்லாடலுக்கு, … Read more

வாழைச்சேனையில் மீன் சார்ந்த உற்பத்திகளைத் தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிறைந்துரைச்சேனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய மீன் மாசி மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வாழைச்சேனை விததா வளநிலைய பொறுப்பதிகாரி எஸ். எச். புர்ஹானுதீன் தலைமையிலான தொழிற்பயிற்சி அதிகாரிகள் மீன் மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை மேள்கொள்ளுதல் தொடர்பான தொழில் வழிகாட்டல், … Read more

அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும்

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். அரச மற்றும் அரை-அரச நிறுவனங்களால், மாவட்ட மற்றும் … Read more

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பதில் நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப … Read more

ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் இதன்போது தெரிவித்தார். அத்துடன் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கம் தொடர்பிலும் இதன்போது … Read more