வெல்லாலகேவின் சிறப்பான பந்து வீச்சு – இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

2023 ஆசிய கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணி 41 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இந்திய அணி; 50 ஓவர்களில் 213 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் … Read more

தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை

தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளிடமிருந்து இத்தாதிப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ் நிலை விண்ணப்பங்களை 2023.09.15 தொடக்கம் 2023.10.18ஆம் திகதி வரை இத்தாதிப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கலாம். மேலதிக தகவல்களுக்காக 2023.09.15ஆம் திகதி அரசாங்க வர்த்தமான மற்றும் சுகாதார அமைச்சின் … Read more

கொழும்பு பல்கலைக்கழக விடுதிக்காக நாரஹேன்பிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு…

1.2 பில்லியன் பெறுமதியான கலிங்க மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்புடன் கூடிய 110 பேர்ச் காணியை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது மிகவும் பெறுமதியான பிரதேசம் என தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர், … Read more

மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதாரஅமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, “மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more

மல்வத்து ஓயா மற்றும் யான் ஓயா திட்டத்தின் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கும் விவசாயத் துறைக்கும் புதிய நன்மைகள்.

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய அரச-தனியார் கூட்டுத் திட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யான் ஓயா நீர்த்தேக்கத்தில் சூரிய சக்தி மின் தகடுகளை பொருத்தவும் மற்றும் 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உத்தேச மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தில் சூரிய சக்தி மின் தகடுகளை நிறுவுவதற்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து யான் ஓயா அணையை நிர்மாணித்த சீன … Read more

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இன்று (12) நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில போட்டி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுடனான நேற்றைய (11) போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய 11 போட்டிகளில் இந்திய அணி 10ல் வெற்றி பெற்றுள்ளது.  India (probable XI): 1 Rohit Sharma … Read more

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, தென், மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாவட்டங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

இலங்கையின் கோப்பி உலகில் சிறந்த கோப்பிகளுக்கிடையில் முதன்மை இடத்தைப் பெறுகிறது – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவர்

இலங்கையின் கோப்பி உலகில் சிறந்த கோப்பி வகைகளுக்கிடையில் முன்னுரிமை பெறுவதாகவும், நாட்டின் கோப்பி உற்பத்தியை பரவலாக்குவது தொடர்பாகவும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக நாட்டின் கோப்பியை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதனால் பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் அல் அமீரி தெரிவித்தார். விவசாய அமைச்சில், நாட்டில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் உரம் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாக … Read more

ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும்

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரிராஜீவ பண்டாரநாயக்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார். நிதி தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான நபர்கள், மாணவர் சந்ததியே எனவும், பாடசாலைகள் ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதியின் தீர்மானம் காலத்திற்குப் பொறுத்தமான முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார். … Read more

ஜனாதிபதியின் பங்களிப்புடன் கோட்டே ரஜமஹா விகாரையில் வருடாந்த ஸ்ரீ தலதா இறுதி பெரஹரா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மஹா பெரஹராவின் இறுதிப் பெரஹரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் (09) ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிரி தர்ம மகா சங்க சபையின் உப பதிவாளர் கலாநிதி அலுத்நுவர அனுருத்த தேரரைச் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், லங்காராமாதிபதி இந்தியானா … Read more