உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதியால் குழு. முன்னாள் சட்டமா அதிபரின் கூற்று தொடர்பில் விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு. சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் … Read more

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

மருத்துவ சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு சுகாதார சேவைகளை உயர் தரத்தில் பேண வேண்டியது அவசியம்

ஜோசப் பிரேசர் வைத்தியசாலை அதற்கு சிறந்த உதாரணமாகும். வலுவான எதிர்காலத்திற்கு இந்நாட்டு சுகாதார சேவை தொழிற்படையை மாற்றியமைக்க வேண்டும் – ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. வெளிநாட்டு நோயாளர்களை இந்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் மருத்துவ சுற்றுலாத்துறை (Medical Tourism) மற்றும் சுகாதார சேவைகள் என்பவற்றை உயர் தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த, முழுமையான சுகாதார கொள்கை அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை … Read more

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குநேற்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. உலக யுத்தங்களின் போதும் 30 வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலும் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்தினால் வருடாந்தம் பொப்பி மலர் தினம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பொப்பி மலர் விற்பனையினால் கிடைக்கும் வருமானத்தை … Read more

நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்…

ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்திற்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும், நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தவும், தங்குதடையின்றி நீர்வழங்கலை வழங்கவும், நீர் சுத்திகரிப்பில் மீளாக்க வலுவுற்பத்தியை பயன்படுத்தவும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், நீர்வழங்கல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் தொடர்பாகவும், பண்ணாட்டு … Read more

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) 2023 – 2025இற்கான தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இலங்கை

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளது. அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும். ஏற்கனவே 2003-2004 காலப்பகுதியில் அயோராவில் தலைமை வகித்த இலங்கை, இரண்டாவதாகவும் தலைமைப்பொறுப்பை ஏற்கவுள்ளது. இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA), என்பது இந்தியப் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது

உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து – 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. இந்த பேரழிவை அடுத்து, இலங்கை அரசாங்கம், அதன் சட்ட அமுலாக்க பிரிவினர், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தன. பல ஆண்டுகளாக, உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகள், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 09ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 … Read more

பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனை அமைச்சரவைக்கு

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” அவசியப்படுகிறது. அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. அதற்கமைய, 2030 இல் இலங்கையின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள்.இலங்கையின் பாதுகாப்பு … Read more