ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியது

நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மையின் பங்கும் முக்கியமானது. ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (07) நடைபெற்ற 16ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, … Read more

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் – இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்திற்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேசமயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த … Read more

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்

காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது – தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது … Read more

பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக…

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் செப். 07 இடம்பெற்ற பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் வரவேற்புரை ஆற்றினார். ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் தியாகிகள் … Read more

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை..

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (07) நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலங்கள் கடந்த 07 மற்றும் 06 பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 15ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமாகவும் இச்சட்டங்கள் 8ஆம் திகதி முதல் … Read more

இலங்கைப் பிரதிநிதிகள் குழு லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம்

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையிலான லெபனானில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள், புதன்கிழமை (செப்டம்பர் 6) லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு பிரதி படைத் தளபதி பிரிகேடியர் சோக் பகதூர் சௌத்ரி அவர்களை சந்தித்தனர். இவ் விஜயத்தின் போது லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதி லெபனானில் உள்ள இலங்கைக் குழுவினால் ஆற்றப்படும் பங்கு … Read more

G77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம்

“G77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார். “தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது. கியூபா ஜனாதிபதி மிகயெல் டயஸ்-கனெலின் (Miguel Diaz-Canel) உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “G77 மற்றும் சீனா” அரச … Read more

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

  சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரே கொள்கையை பின்பற்றுவோம் – எப்பாவல மத்திய கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எப்பாவல சித்தார்த்த மத்திய … Read more

வெற்றிடங்களை நிரப்ப 4000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த

வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் e-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  (07) நடைபெற்ற ஊடக … Read more

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பில்…

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ‘டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 500க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ள இந்த மாநாடு இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தினால் … Read more