வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேசிய கொள்கை, அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேசிய கொள்கை, அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்திலும் திருத்தம் செய்ய நடவடிக்கை. வருடாந்தம் 7000 மில்லியன் டொலர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டும் இலக்கு இவ்வருடத்திலேயே எட்டப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார.நிபுணர்களின் உதவியுடன் வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு இணையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் … Read more

பியகமவை முன்னுதாரணமாக கொண்டு முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளமையினால், இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டு பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகுக்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மல்வானை … Read more

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் அவரது அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், … Read more

2022/2023 கல்வி ஆண்டிற்காக செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

2022/2023 கல்வி ஆண்டிற்காக செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக கோரப்படும 2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்காக … Read more

நக்டாவின் புதிய தலைவராக கலாநிதி விஜேரத்ன நியமனம்

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) புதிய தலைவராக கலாநிதி பீ. விஜேரத்ன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சில் வைத்து அமைச்சரினால் நேற்று (06.09.2023) வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே அஸ்வெசும திட்டத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். நக்டாவின் (NAQDA) தலைவராக பதவி வகித்த கலாநிதி ஜயந்த விஜேரத்ன அஸ்வெசும திட்டத்தின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் … Read more

“வல்லாரைக் கீரை ஏற்றுமதியால் வாழ்வாதாரத்தை வெற்றிகொள்வோம்”

ஏற்றுமதி வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு வல்லாரைக் கீரை உற்பத்தியை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் அகுரெஸ்;ஸ, மாலிம்பட, அதுரலிய மற்றும் பிடபெத்தர போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வல்லாரைக் கீரை உற்பத்தியாளர்கள் இலங்கையின் ஒரேயொரு மற்றம் முதலாவது சேதன ஏற்றுமதித் தரத்திலான வல்லாரைக் கீரைக் கிராமமான களுத்துறை மில்லனிய சேதன ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றம் தொடர்பான மேற்பார்வை விஜயமொன்றை பிரதேச ஏற்றுமதி மற்றும் விவசாய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டனர். இதன்போது உற்பத்தி நிலம் … Read more

பாதுகாப்புச் செயலாளரால் எழுதப்பட்ட 02 நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘தாராகே ஆகமனய’ மற்றும் “கடொல் எத்து” (மொழிபெயர்ப்பு நூல்) மற்றும் “எஹே கந்துலெலி” பாடல் வெளியீட்டு விழா நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ஆனந்த வித்தியாலய குலரத்ன மண்டபத்தில் நடைபெற்றது. இரண்டு நாவல்களின் முதல் பிரதிகளை ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார். அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தேசிய பாதுகாப்பு … Read more

இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான 2023 ஆசிய கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நேற்று (05) 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்படி, பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று B குழுவின் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்ற இலங்கை அணி, இவ்வருட ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (5) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் … Read more

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதுஇ தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும்இ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக தங்களது தொழிலுக்கும் பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்பட்டதாகவும்இ கப்பல் விபத்து காரணமாக கடற்கரையில் கருவாடு உலர வைக்கும் நடவடிக்கைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அதனால் தமது பொருளாதரத்திற்கு … Read more