தற்கொலைகளை தடுப்பதற்கான ஆலோசனை வழங்கும் வழிகாட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தற்கொலைகளை தடுப்பதற்கான விடயங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயகத்தில் (04) இடம்பெற்றது. மாவட்ட செயலக பிரதி கணக்காளர் எம்.ஏ பஷீர் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான ஆலோசனை வழங்குவது தொடர்பிலும் எம்மால் உதவ முடியும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு 3224 தற்கொலைச் சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகமானவர்கள் ஆண்களாகவும், குடும்ப … Read more

4 சூப்பர் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்தில்…

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் கீழ் 4 சூப்பர் அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டிகள் அடிப்படை அட்டவணைப்படி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் கொழும்பில் பெய்து வரும் மழை காரணமாக இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 சூப்பர் அணிகளுக்கிடையிலான போட்டிகளை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நாட்களில் மழை குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்புடன், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யாமல் இருக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை … Read more

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் … Read more

ஆபிரிக்க காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமருடன் சந்திப்பு

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். எகிப்து பிரதமர் மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளும் இயலுமை தொடர்பில் … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை மதுரங்குடா கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 செப்டெம்பர் 02 ஆம் … Read more

இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்க தெரிவித்தார். 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் 70% இரசாயன உரம் மற்றும் 30% சேதனப் பசளை என்ற விகிதத்தில் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஹெக்டயாருக்கு அதிகபட்ச விளைச்சலைப் பெற முடியும் … Read more

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என … Read more

தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி மீதான கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும்

தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி மீதான கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும் – நிதி அமைச்சு அரசாங்க நிதி பற்றிய குழுவில் உறுதி முதல்தடவையாகப் புலம்பெயர் கொடுப்பனவைக் கோருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கான தகைமையுடைய புலம்பெயர் கொடுப்பனவு 30,000 அமெரிக்க டொலரிலிருந்து ஆகக் கூடியது 50,000 அமெரிக்க டொலராக அதிகரிப்பு தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் 2023ஆம் ஆண்டு இறுதியில் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நிதி அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக … Read more

சபாநாயகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இலங்கையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் பாராட்டுக்களைத் தெரிவித்தார். … Read more

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – அமைச்சர் டக்ளஸ்

ஆழ்கடல் மீன் பிடிப் படகுகள் சர்வதேச எல்லைகளை தாண்டி தொழிலில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடல் எல்லைகளை தாண்டிச் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார காலத்தினுள் விடுவிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்துடன் நேற்று (04.09.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். … Read more