ஆசிய கிண்ணப் போட்டியில்; இன்று இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன

இலங்கை பங்கேற்கும் 2023 ஆசிய கிண்ணத்தின் முதல் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (05) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் பகல் மற்றும் இரவு போட்டியாக பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும். லாகூர் மைதானத்தில் இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளதுடன், அந்த மைதானத்தில் முன்னதாக இலங்கை அணி பங்குபற்றிய 13 போட்டிகளில் 9ல் … Read more

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்.

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எந்தவொரு தேர்தலோ ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதில் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு தேர்தலும் குறித்த திகதியில் சட்டரீதியாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் … Read more

வார இறுதி நாட்களில் 'அனைவருக்கும் IT' கல்வித் திட்டம்

தேசிய தொலைக்காட்சி மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘அனைவருக்கும் IT’ கல்வித் திட்டம் ஒன்றை ஒவ்வொரு வார இறுதியிலும் நடாத்தி வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அதன்படி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு இக் கல்வி … Read more

ஊடக அறிவித்தல்

சபாநாயகரின் அறிவித்தல்கள் ◾ உயர் நீதிமன்ற தீர்மானம் அரசியலமைப்பின் 121 (1) யாப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள விடயங்களின் பிரகாரம், சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பின் 12 ஆவது யாப்பு அல்லது அரசியலமைப்பின் ஏனைய ஏற்பாடுகளுக்கு முரணனானது … Read more

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புளியங்குளம் பிரதேசத்தில் மிளகாய் உற்பத்தி

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்தை நவீன மயப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் திறப்பனை பிரதேச செயலக பிரிவின் 531 புளியங்குளம் கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியதாக மிளகாய் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முதற் கட்டத்தின் கீழ் பயனாளிகள் 25பேருக்காக அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் உற்பத்திக்காக 16இலட்சம் பெறுமதியான மிளகாய் விதைகள், உரம், விவசாய இரசாயனம், பாதுகாப்பு வேலி, பொலிதீன் மற்றும் கழிவகற்றும் பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவ்வுற்பத்தி மிகவும் … Read more

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு MSEDO நிறுவனத்தினால் மீன்பிடி உபகரணங்கள் கையளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய்,அளம்பில், கள்ளப்பாடு, செம்மலை கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு நண்டு வலை,சூடை வலை, கொண்டை வலை முதலான மீன்பிடி உபகரணங்கள் MSEDO நிறுவனத்தின் உதவியினால் நேற்றைய தினம்(4) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாற்பது மீன்பிடி பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு பயனாளருக்கு 45000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு … Read more

இணையம் மூலம் பாதிப்புக்குள்ளாகும் அப்பாவி மக்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வு..

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு … Read more

இலங்கை பிரதிநிதிகள் இந்தோனேஷி சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர்

புதிய தொழில் சட்ட மறுசீரமைப்புடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள தொழில் அற்றோருக்கான காப்புறுதி ,தாய் , சேய் நலன்கள் , பணியிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற ஆலோசனைகளை செயல்படுத்துவதற்காக தற்போது இந்தோனேஷியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை ஆழமாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கை சர்வதேச தொழில் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜப்பான் அரசாங்கமும் இதற்கு பங்களிப்பு செய்துள்ளது. இந்தோனேஷியாவில் தற்போது … Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையில் சந்திப்பு

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இலங்கையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் பாராட்டுக்களைத் தெரிவித்தார். … Read more

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் எரிவாயுவின் விலை கடந்த மாதத்தை விட இம் மாதம் 100 டொலர்களால் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (04) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு அறிவித்தார். இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால்;; அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 58.00 ரூபாவினால்; அதிகரிக்கப்பட்டு;ள்ளதுடன், அதன் புதிய விலை 1,256.00 ரூபாவாகும். … Read more