ஹோமியோபதி வைத்திய முறையை நாட்டில் பிரபலப்படுத்த நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்

பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையை இந்நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடியின் கருத்திற்கமைய அவ்வமைச்சினால் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மருத்துவ சபையின் முதலாவது ஹோமியோபதி மருத்துவ மாநாடு அண்மையில் (01) கடவத்த இந்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு, ஹோமியோபதி தனியார் மருத்துவ மனைகளுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஹோமியோபதி மருத்துவர்களின் அறிவு மற்றும் அணுகுமுறையை … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் மற்றும் அவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்கும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்வைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் (01) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அலுவல்கள் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இக்காணிகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். மக்கள் … Read more

கிழக்கு மாகாணத்தில் பல்திறன் நோக்கு அபிவிருத்தி ஊழியர்கள் 886 பேருக்கு நிரந்தர நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்திறன் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கப்பட்டது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் பல் திறன் நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இரண்டு வருட காலமாக வழங்கப்படாமல் தற்காலிக நியமனத்திலே பணியாற்றி வந்தனர். … Read more

இந்த ஆண்டு வெளிநாட்டு தொழிலுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று (03) மாலை ஆறு மணிவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 200,026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழிலுக்காக சென்ற ஆண்டாக கடந்த வருடம் பதிவாகியிருந்ததுடன், அந்த வருடத்தில் மூன்று இலட்சத்து பதினோராயிரம் பேர் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

கடந்த 2ஆம் திகதி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று இலங்கையுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால், 18 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. அணித்தலைவர் சமரி அத்தபத்து 31 பந்துகளில் 55 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம … Read more

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார (செப்டம்பர் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை காலம் உபவேந்தராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே ரியர் அட்மிரல் தம்மிக்க குமார புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ரியர் அட்மிரல் குமார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற கடற்படை அதிகாரி … Read more

வடமாகாண தென்னை முக்கோண வலய அங்குரார்ப்பண நிகழ்வு!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம்(02) சிறப்புற இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் Dr.ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டத்தில் காலை 9.30மணிக்கு இடம்பெற்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் பங்கேற்புடன் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, தென்னை … Read more

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ வரையான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது   மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த … Read more

இலங்கை மக்களுக்கு சுத்தமான, சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரை பெற்றுக்கொடுக்க வேண்டும்

  நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று அமைச்சில் இடம் பெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ், அரச மறுசீரமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய காலக்கெடு … Read more

மக்கள் அனைவரினதும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த

நாட்டின் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் … Read more