வடக்கு கிழக்கில் விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை

வடக்கு கிழக்கில் விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் மட்டக்களப்பில் திறந்து வைப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது பார்வையற்றோருக்கான வீதி சமிஞ்சை விளக்கு மட்டக்களப்பில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் (31) மாலை திறந்து வைக்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பிரதான … Read more

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி. எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் … Read more

புதிய கல்வி மறுசீரமைப்புகளில் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் – பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்குவதற்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர … Read more

தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

– தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்– அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம் மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார … Read more

உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம்

தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அமைச்சுகளுக்கு இடையேயான பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத்து, தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கானதொரு டிஜிட்டல் தளத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோர் இந்த புதுமையான டிஜிட்டல் பின்தொடர்தல் பொறிமுறையை 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். இலங்கைக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வு இன்று ஆரம்பம்

கைத்தொழில் அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நாடு முழுவதும் வணிக விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் (01.09.2023) யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வை மேற்கொள்கின்றது. இவ் ஆரம்ப நிகழ்வு கௌரவ கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன … Read more

இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP) தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமை சுட்டெண் (MPI) மற்றும் பல பரிமாண இடர் சுட்டெண் (MVI) ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப எதிர்கால திட்டங்களை தயாரிக்குமாறு கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். இது இடர் நிலைமைகள் மற்றும் வறுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் என்று பிரதமர் கூறினார். UNDP வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) … Read more

இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 43 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக Najmul Hossain Shanto 89 ஓட்டங்களையும், Towhid Hridoy 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அபார பந்துவீச்சில் … Read more

கண்டி பெரஹெராவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும் – ஜனாதிபதி. தேசத்தின் வண்ணமயமான கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால் நேற்று (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஊர்வலமாக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் … Read more