எரிபொருள் விலை அதிகரிப்பு

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, … Read more

இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண ஜனாதிபதி இணைந்து கொண்டார்

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார். பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனும் (Chris Van Hollen), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie … Read more

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர். அதுதொடர்பாக ஆராய்ந்த … Read more

தாதியர்கள் 3000 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதை விரைவுபடுத்துக. – சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை

நாட்டில் தாதியர் சேவைக்கு மேலும் 3000 தாதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற் கு அவசியமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல (29) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதில் சிக்கல்கள் காணப்படுமாயின் அதற்குப் பொருத்தமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார். சுகாதார அமைச்சரின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சுகாதார அமைச்சில் … Read more

சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். “பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்),” “ஒதுக்கீடு (திருத்தம்)” மற்றும் “இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்” எனும் சட்டமூலங்கள் கடந்த 21ஆம் திகதி இவ்வாறு சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டன. இதற்கமைய பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமாகவும், ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டு 12ஆம் … Read more

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) நேற்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் போது பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் பயணப் பாதையை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் போது பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் பயணப் பாதையை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகின்றது. “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” குறித்த நிபுணர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பாதையை பின்பற்றி, போட்டித்தன்மைமிக்க, புதிய சந்தை வாய்ப்புகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஊக தெரிவித்தார். “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” என்ற தலைப்பில் அலரி … Read more

தென் கொரிய நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம்

  தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில், இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது, கடற்றொழில் அமைச்சில் நேற்று (29.08.2023) இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது இலங்கையில் மீன்களுக்கான உணவு, கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மீன்பிடி படகு தொழிற்சாலை ஆகிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் கடற்றொழில் துறைமுக வளாகத்தில் … Read more

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருத்துவர்களுக்காக தனிப்பட்ட ரீதியாக காணிகளின் உரிமையை வழங்குவதற்கான உறுதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கும் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக இன்று (29) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் … Read more

15 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிக் குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக  கொடுப்பனவுகள்!

 • ஏற்கனவே 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. • எஞ்சியுள்ள அனைவருக்கும் தேவையான பணம் விரைவில் வழங்கப்படும். • அனைத்து விசாரணைகளையும் 1924 துரித எண்  மூலம் மேற்கொள்ளலாம். • போலியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் பணத்தை திரும்பப் பெறவும் தயங்க மாட்டோம். – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க    20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள்,  கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக … Read more