மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   (29) பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதனையடுத்துதேரர், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான கொடுப்பனவுகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு – கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலே அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீண்ட தூரங்கள் செலவழித்து சென்று திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக விடைத்தாள் திருத்துனர்களுக்கு 2,000 ரூபா உடனடிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதனால் சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துனர்களுக்கு இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படாது போகலாம். எனினும், … Read more

மேல் மாகாணத்தில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்னோடி திட்டம் – போக்குவரத்து அமைச்சர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடித் திட்டம் இதுவெனவும், இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… உத்தேச திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள மின்சார … Read more

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

லங்காபடுன, குச்சவேளி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2023 ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம், சளை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேருடன் ஆறு (06) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர். இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஆகஸ்ட் 28) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோரிக்கிடையில் … Read more

இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரச் செயலாளர்கள் இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவு

05வது சுற்று இலங்கை – தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்கிய அதே வேளை, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவிற்கு தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செயலாளர் சருன் சரோன்சுவான் தலைமை தாங்கினார். கலந்துரையாடலின் போது, மேலதிக முன்னேற்றத்திற்காக, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய … Read more

மன்னாரில் பயறு அறுவடை

விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினாலும், மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமும் மற்றும் கமகாரர்களின் சொந்த பணத்திலும் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான பொருட்கள் வழங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் சுமார் 1600 ஹெக்டயர் நிலப்பரப்பில் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள நெல் வாயில்களில் மாற்றுப் பயிராக பயறு பயிரிடப்பட்டிருந்தது. குறித்த பயிர் செய்கையின் அறுவடையினை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் … Read more

பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் தலையீடற்ற நிறுவனமாக இயங்குகின்றது

நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் தலையீடற்ற நிறுவனமாக இயங்குகின்றது என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு … Read more

சுகாதார சேவைகள் மற்றும் மருந்து போன்றவை மக்களின் வாழ்க்கையுடன் முதன்மையாகப் பிண்ணிப் பிணைந்தவைகள் – சுகாதார அமைச்சர்

சுகாதார சேவைகள் மற்றும் மருந்து போன்றவை மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்த முடிவில்லாத துறையாக செயற்படும் போது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் என்பன முதன்மையாக செல்வாக்குச் செலுத்தும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மருந்துகளை உற்பத்தி செய்தல், தரப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், வழங்குதல், விநியோகித்தல் என்பன தொடர்பாக சுகாதார அமைச்சின் சகல நிறுவனங்களின் தலைவர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சுகாதார மற்றும் மருந்துத் துறையில் இடம்பெறும் ஒவ்வொரு … Read more

சபரகமுவ மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களை பிரிட்டிஷ் கௌன்ஸில் நிறுவனத்தினால் பயிற்றுவிக்க நடவடிக்கை

ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டத் தொடரில் இரண்டாவது பயிற்சிப் பட்டறை மெனேரிபிடியவில் அமைந்துள்ள கல்வி, பயிற்சி, ஆய்வு மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயகவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆங்கில ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பபத்தை சபரகமுவ மாகாணத்தில் முன்னேற்றுவதற்காக 700 ஆங்கில ஆசிரியர்களுக்காக பிரிடிஷ் … Read more