மட்டக்களப்பில் நிலவும் கடும் வறட்சி! பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்தும் குடி நீர் விநியோகம்!!
நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி எதுவும் கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநிலை தெடர்ந்து நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8,892 குடும்பங்களைச் சேர்ந்த 29,508 நபர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 2,561 குடும்பங்களைச் சேர்ந்த 8,805 நபர்கள் அதிக பட்சமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more