மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் கிழக்கு மாகாணம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்
இந்திய அரசின் உதவியுடன் திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.2019-2023 திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதி. 1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா … Read more