இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் தூதுவராக கலாநிதி பெலிக்ஸ் நியூமன் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி (திரு) பெலிக்ஸ் நியூமன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி) காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.  

இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக அண்ட்ரூ பட்ரிக் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. அண்ட்ரூ பட்ரிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி) காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.  

தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது

  தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களையும் உரிய நேரத்தில் வழங்கியதாலும் நிதி உதவி அளித்ததன் காரணத்தினாலும் கடந்த பெரும் போகம் வெற்றியடைந்ததாகவும், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் அதிக அறுவடை கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று … Read more

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். காலநிலை மற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். துறைசார் முன்னோடிகள் நிபுணர்கள் … Read more

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள்

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பல்லின சமூக அமைப்பினால் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு இராணுவ வீரர்களின் பிள்ளைகளும் நாட்டுக்கான கடமையைச் செய்ய வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர் க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் 9 ‘A’ சித்திகளுடன் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கான ரூ.1.2 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைக்கப்பட்டது. ரணவிரு சேவா … Read more

மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

கடும் வறட்சியால் மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி வழங்குவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அவரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடும் வறட்சியால் கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு குடிநீரை வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், கண்டியில் எசல பெரஹரா உற்சவம் ஆரம்பமாகியுள்ளது, ஆசிய விளையாட்டு … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் பல்வேறு நலனுதவிகள் பகிர்ந்தளிப்பு

உலக உணவுத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கிரான் மற்றும் ஏனைய பிரதேச மக்களுக்கான நலனுதவித் திட்டங்கள் (21) வழங்கப்பட்டன. இதனடிப்படையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். சுதாரன் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது 08 சிறிய ரக களை நீக்கும் உழவு உயந்திரங்கள், 04 நிலக்கடலை கோது … Read more

களுவாஞ்சிகுடியில் மரநடுகை திட்டத்தின் கீழ் பழமரத் தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மரநடுகை திட்டத்தின் கீழ் பழமர தோட்டம் அமைக்கும் நிகழ்வு (22) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் குருக்கள்மடம் அசீசி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக பிரிவில் இந்த நிகழ்வினை பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச கிராம சேவை, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. ராஜதிலகன் மற்றும் விதாதா … Read more

சபரகமுவ மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கேகாலை மக்களுக்கு பல்வேறு உதவிகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு வழங்குவதற்காக சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் கோட்பாட்டிற்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட ஆளுநரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டம் நேற்று (22) வரக்காபொல, தொல்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நடமாடும் சேவைக்கு ஈடாக கேகாலை தெதிகம மகபல்லேகம சேனாநாயக வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆங்கில செயன்முறை பிரிவு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இந்த ஆங்கிலச் செயல்பாட்டுப் பிரிவு 40 மடிக் கணனிகளுடன் ஸ்மார்ட் பலகை இரண்டும் பொருத்தப்பட்டு பூரண நட்பு … Read more

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல் குடியரசு ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தூதுவர்களை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான … Read more