சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (22) இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அண்மையில் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதுவரை … Read more

இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவவராக டாமியானோ ஃபிராங்கோவிக் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இத்தாலி குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டாமியானோ ஃபிராங்கோவிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி) காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன இராணுவ தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இராணுவ நோக்கங்களுக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து வழங்கப்பட்ட 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ‘அவசர கட்டளை மற்றும் அதிநவீன தொடர்பாடல் முறைமை வாகனத் தொகுதி’ (11 வாகனங்கள்) பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இராணுவ தலைமையக வளாகத்தில் நேற்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது. இராணுவத்திலிருந்து … Read more

ஒலுவில் துறைமுகத்தை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் குறித்த குறைபாட்டினை கணிசமானளவு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். கிழக்கிற்கான விஜயத்தை கடற்றொழில் அமைச்சர் விரைவில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக (21) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

இரு நாடுகளினதும் பொருளாதார ஒருமைப்பாடு தொடர்பில் அவதானம்.காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து. சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் … Read more

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது சம்பளம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்திற்கும் வழங்கப்படும் சம்பளத் தரத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்த சிக்கலுக்குத் தீர்வு வழங்கும் வரை நியமனங்களை தற்காலிகமாக பிற்போட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்ததுடன், … Read more

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, அதிகூடிய ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையானது 34% ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஆரம்பக் கைத்தொழில் … Read more

ஐ.நா அலுவலகத்தால் நடத்தப்பட்ட சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தால் நடத்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தில் உலகளாவிய கடல்சார் குற்றவியல் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் நடத்தப்பட்ட கடல்சார் சட்ட அமுலாக்க முகமைகளுடன் இணைந்த பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடற்கரை ரோந்து கப்பல் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 99 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் தடாகத்தில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம் தடாகத்தில் மட்டத்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த சுமார் தொண்ணூற்றொன்பது (99) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான) எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டுள்ளன வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் … Read more

மட்டக்களப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிற்கும் இலங்கைக்காண உலக உணவு திட்ட பணிப்பாளர் அப்துல் சித்திக்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம் பெற்றது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உலக உணவு திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பல செற்றிட்டங்களை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. உலக உணவுத்திட்டத்தினால் போதிய வருமானம் அற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக கால்நடைகளும் வழங்கப்பட்டு வருகின்றமை … Read more