கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் – முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு!

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். இதன்போது, புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டன. கடற்றொழில் அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் … Read more

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஜனாதிபதியால் குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆசியாவின் வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றியவர்!நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு அரச பொறிமுறையில் மாற்றம் அவசியம்.அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் இயலுமை ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை … Read more

லாவோஸ் நாட்டின் கென்சியூலர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் இலங்கைக்கான கென்சியூலர் மனிலே திபலான்சி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இங்கு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான பௌத்த கலாசார நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும், லாவோஸ் மக்கள் குடியரசின் வணிகச் செயற்பாடுகள் குறித்தும், அந்நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் சந்திப்புசிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடனும் சந்தித்து பேச்சு. சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று நேற்று (21) காலை இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதியினால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சுமூகமான கலந்துரையாடியதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு தொடர்புகளை … Read more

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சிங்கப்பூர் விஜயத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரையில் நிதி அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) அதிகாலை சிங்கப்பூர் சென்றததை தொடர்ந்து, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவினால் கடமைகள் மேற்கொள்ளப்படுகிறது.

எல்.பி.எல் இறுதிப் போட்டியை கண்டுகளித்தார் ஜனாதிபதி

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார். இறுதிப் போட்டியை பார்வையிட வருகைதந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஆகியோரும் போட்டியை கண்டுகளித்தனர்.

 விவசாயத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் ஆரம்பிக்குமாறு யுனான் விவசாய நிபுணர்களுக்கு பிரதமர் அழைப்பு

7வது சீனா-தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக யுனான் தலைநகர் குன்மிங்கிற்கு ஒரு குறுகிய ஆனால் பயன்மிக்க விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் விவசாய ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற மாகாணத்தின் பண்டைய தலைநகரான டாலி நகரத்தை சென்றடைந்தார். அங்கு டாலி குளக் கரையில் உள்ள குஷெங் கிராமத்தில் உள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளாகத்திற்குச் சென்றார். இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அண்மைய நெல் வகை சாதாரண நெல்லைப் பார்க்கிலும் நான்கு மடங்கு … Read more

சீனாவுக்கான வெற்றிகரமான பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பினார்

யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்ற 7வது சீன-தெற்காசிய கண்காட்சியில் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு (19) இரவு நாடு திரும்பினார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்றிரவு அவர் குன்மிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, யுன்னான் CPC செயலாளர் ஜாவோ ஜினுரிங் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு பிரதமரை வழியனுப்பியதுடன், … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம்

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் ஆராயப்பட்டது. குறித்த குழு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் … Read more

பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது

• இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தை நாளை (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப … Read more