விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெல் கொள்வனவுக்கு சந்தைப்படுத்தல் சபைக்குப் போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை. திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியைக் கொண்டு ஓரளவுக்கு நெல் கொள்வனவை மேற்கொண்டுள்ளோம். இருந்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நெல் … Read more

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு

ஒத்துழைப்போருக்கு உதவிகளை வழங்க அரசாங்கம் தயார் -“ஹில்டன் யால ரிசோர்ட்” அதி சொகுசு ஹோட்டலை திறந்துவைத்து ஜனாதிபதி உரை. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை விரைவாக அடையக்கூடிய, முன்னணி துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதால், அதனை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் போது அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், ஒத்துழைப்புக்களை வழங்கும் தரப்பினருக்கு அவசியமான வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என்றும் உறுதியளித்தார். ஹில்டன் … Read more

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம்

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம்பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக இன்று (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின்; சில இடங்களுக்கு மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் … Read more

மத்திய மாகாணத்தில் சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்தும், நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. அமைச்சருக்கும்;, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று … Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரை சமய நிகழ்வுகளில் சாகல ரத்நாயக்க பங்கேற்றார்  

  வரலாற்று சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹரவை முன்னிட்டு (18) பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரை விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொழும்பு ஹெவலொக்சிட்டி சாம விகாரை விகாராதிபதி வண.அதபத்துகந்தே ஆனந்த நாயக்க தேரரும் இந்த … Read more

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வொன்று மேற்கொள்ளப்படும்

   பாதுகாப்புப் படைகளின் நலன் மற்றும் ஓய்வு காலத்தைப் பாதுகாப்பது குறித்து விசேட கவனம் இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் … Read more

சாதிக்காய் மரங்களில் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிப் பயிர் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை

சாதிக்காய் மரங்களில் ஏற்பட்டுள்ள இலை உதிரும் பூஞ்சை நோயினால் நாட்டின் சில பிரதேசங்களில் சாதிக்காய் உற்பத்திக்கு பாதிப்பேற்பட்டுள்ளதாக ஏற்றுமதிப் பயிர் விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சாந்த பண்டார தெரிவித்தார். இப்பூஞ்சை நோயினால்  ஒரு தடவை தொட்டால் கூட சாதிக்காயின் இலைகள் உதிர்வதாகத் தெரிவித்த பிரதிப் பணிப்பாளர் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போது பயிர்ச் செய்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சாதிக்காய்ப் பயிர்ச் செய்கையில் இலை உதிர் நோய் குறித்து உற்பத்தியாளர்களை அறிவூட்டுவதற்காக பயிர்ச் செய்கையாளர்களை … Read more

அதிக இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 198 ரூபா என அறிவிக்க நடவடிக்கை

இரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விற்பனை விலை 198 ரூபா என அறிவிக்கவும் – அரசாங்க நிதி பற்றிய குழு திறைசேரியின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் • சீமெந்து பக்கற்றின் தறையிறக்கப்பட்ட விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம் 700 ரூபாக இருக்கும் நிலையில் மோசடியான இலாபம் குறித்து அறிக்கை கோரல்• அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வரி அதிகரிப்பினால் ஏற்படும் சமூக … Read more

 ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் பிரச்சினையில் தலையிடத் தயார் – கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர்

சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான பிரச்சினையில் தலையிடத் தயார் என கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (15) கூடிய பாராளுமன்ற வழிவகைள் பற்றிய குழுவிலேயே கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.   அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கூடியிருந்ததுடன், ‘அஸ்வெசும’ … Read more