மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு JICA உதவி

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இதன்போது, மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை … Read more

நாட்டில் பிரதானமாக சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் பெய்யக் கூடுவதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் … Read more

நவீன தொழில்நுட்பத்துக்குப் பொருத்தமான கல்வி முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்

கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் – நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், … Read more

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட இடமாகவும் இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்துறையை … Read more

பாராளுமன்ற குழு அறை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது 

பாராளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற வீடு பராமரிப்புப் பிரிவு தொடர்பில் 2023 ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த திகதிகளில் வெளியிடப்பட்ட ஊடக செய்திகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, இக்குழு தற்பொழுது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செயலாளர் நாயகம் மேலும் … Read more

எதிர்பார்த்த வருமான இலக்குகளை அடைய உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை

அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை எனவும், அவர்கள் தொடர்பில் இந்த புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் கடுமையான தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் அரச … Read more

இலங்கை நிதி கடன் சவால்களுக்கு முகம்கொடுக்க உதவ சீனா தயார் 

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர், (வெளிவிவகார ஆணைக்குழு அலுவலக பணிப்பாளர்) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கும் இடையிலான சந்திப்பொன்று (16) இடம்பெற்றது. தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் 7வது சீனா-தெற்காசிய கண்காட்சியுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நிதிக் கடன் தொடர்பான சவால்களை பயனுறுதிமிக்க வகையில் எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று திரு.வாங் யீ கூறினார். சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருப்பதாகவும், … Read more

 யாழ்ப்பாணத்தில் இந்திய போர்வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டி, 1987-1990 காலப்பகுதியில் இலங்கையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், யாழ். பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவு தூபியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அலுவலகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தது. நினைவுத்தூபியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் … Read more

ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) சரத்துக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு, 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகமைகளைக் கொண்டுள்ள இலங்கை பிரஜைகள் விண்ணப்பிக்கலாம். 01. இலங்கை உயர் நீதிமன்றற்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாக இருத்தல். 02. சட்டத்துறையில் சிறந்த வரவேற்பு மற்றும் தொழில்துறை திறன்களை வெளிக்காட்டியிருத்தல். 03. இலங்கை சட்டத்தின் … Read more

பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்ற புதிய செயற்திட்டங்கள் அவசியம்

பெருந்தோட்ட தொழில்துறையில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இலங்கைத் தேயிலையை சர்வதேச அளவில் தூய தேயிலையாகக் கொண்டு செல்லும் இலக்கில் வெற்றியடையுங்கள் – கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் … Read more