இந்திய – இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும்

நெருங்கிய புரிதலுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் -சாகல ரத்நாயக்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு … Read more

உமா ஓயா, டயரபா நீர்த்தேக்கத்தின் பலன்கள் விரைவில் மக்களுக்கு – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் 

உமா ஓயா பல்நோக்கு வேலைத்திடத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் தேசிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் கிடைக்கும் என்பதோடு, பெரும்போகத்தின் போது 15,000 ஏக்கர் நிலத்தில் நெல் விளைச்சலை மேற்கொள்ள முடியும் எனவும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு நீர்ப்பாசன அமைச்சு பெருமளவான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் … Read more

இலங்கையில் சர்வதேச  தரத்திலான  இரசாயன ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பேராசிரியர் அலாகா சிங் மற்றும் சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. நாட்டில் பாரிய குறைபாடாகக் காணப்படும் பென்ச்மார்க் 4ஆவது சர்வதேச தரத்திலான இரசாயன ஆய்வு  கூடமொன்றை நிர்மாணித்தல் தொடர்பாக இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடினர்.   இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல: ஜனாதிபதி இது தொடர்பாக ஆழமாக அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்கான ஒதுக்கீட்டிற்கு பிரதான செயற்பாடாக கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. … Read more

இரண்டாவது தேசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் கடற்படை ஆடவர் அணி வெற்றி

இரண்டாவது தேசிய கரப்பந்தாட்டப் போட்டி ஆகஸ்ட் மாதம் 11 முதல் 14ஆம் திகதி வரை புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.  இப்போட்டியில் இராணுவ மற்றும் கடற்படை அணிகள் போட்டியிட்ட இக்கரப்பந்தாட்ட  இறுதிப் போட்டியில் கடற்படை ஆடவர் அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 21 கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டதுடன், இராணுவ அணி மற்றும் கடற்படை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 31-36 என்ற  புள்ளிகள் வித்தியாசத்தில் இராணுவ அணியைத் தோற்கடித்து, கடற்படை … Read more

சீனா உண்மையானதும் தீர்க்கமானதுமான உலகளாவிய தலைமைத்துவத்தை வகிக்கிறது – பிரதமர் 

மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தனது சாதனைகளை உலகளாவிய தெற்கு நாடுகளை நோக்கி திருப்ப சீனா சர்வதேச பொருளாதார முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. சீனாவின் குன்மிங்கில் நேற்று (16) ஆரம்பமான சீன வர்த்தக அமைச்சும் யுனான் மாநில அரசும் இணைந்து ஏற்பாடு செய்த 7ஆவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிராந்திய விரிவான … Read more

புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் நேற்று (16) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். பாதுகாப்புச் செயலாளர் புதிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகருக்கு அன்பான வரவேற்பு அளித்ததுடன் அவருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, அவசர காலங்களின் போது இலங்கை தமது நாட்டுக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த கேர்ணல் பாரூக், தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் எதிர்வரும் பாதுகாப்பு மாநாடு தொடர்பிலும் கலந்துரையாடினார். … Read more

மீன்களின் விலை வேகமாக குறைவடையும் 

கடந்த காலங்களில் காலநிலை மாற்றம், தென்மேற்கு பருவக்காற்று இல்லாததால் மற்றும் வழமைக்கு மாற்றமாக பருவகாலம் காரணமாக வேகமாக அதிகரித்த மீன்களின் விலை தற்போது பாரியளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. பி. உபுல் நேற்று (16) மீன்பிடித் துறை அமைச்சில் வைத்து அமைச்சருக்கு அறிக்கை வழங்கினார். இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர், தற்போது லின்னா பாரை மீன் 400 தொடக்கம் 500 ரூபாவும்,  சூரை மீன் 1100 ரூபாவும், கணவாய் 700ரூபாவும்,  பலயா 700ரூபா வரையும் … Read more

அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய ஒரு தொழில்துறையாக மேம்படுத்தப்படும் சுதேச வைத்தியத் துறை

பாரம்பரிய வைத்தியர்களின் பதிவுப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய திட்டம். ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை. ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனம். சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு ஆயுர்வேத திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி. சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார். ஜனாதிபதி … Read more

சீனாவின் குன்மிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் 

சீனாவின் யுனான் மாகாணத்திற்கான 4 நாள் பயணத்தை ஆரம்பித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். குன்மிங் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) யுனான் மாகாணக் குழுவின் துணைத் தலைவர் சாவோ ஜின், (Zhao Jin) , இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளர் திரு. கே.கே. யோகநாதன் மற்றும் தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுனான் … Read more

கறுவா உற்பத்தி  அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

கறுவா அபிவிருத்திக்காக புதிய திணைக்களமொன்றை ஸ்தாபிப்பிதற்காக ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்ததுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் நேற்று (15) அரசாங்கத் தகலவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். கறுவா சிறு ஏற்றுமதிப் பயிருக்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதாகவும், இது எக்காரணத்திற்காகவும் பெருமளவான நபர்கள் காணப்படும் … Read more