ஈரானின் இராணுவ இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்தின் இராணுவ இணைப்பாளர் கேணல் ஹோமவுன் அலி யாரி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களை நேற்று (15) சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர். இச்சந்திப்பின் முடிவில்இ லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள்இ நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடையாளமாக கேணல் ஹோமவுன் அலி யாரி … Read more

இராணுவத் தலைமையக சிப்பாய்களுக்கு நிவாரணப் பொதிகள்

இராணுவத் தலைமையக இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நேற்று (15) இராணுவ தலைமையகத்தில் சேவையில் உள்ள வீரர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அந்த நிவாரணப் பொதிகளை விநியோகித்தார். … Read more

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சூரிய மின்கலங்களைப் பொருத்த இணக்கம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் (14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சூரிய மின்கலங்களைப் பொருத்துவதற்கு  காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் … Read more

புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு

இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு அண்மையில் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் இறால் பண்ணை உரிமையாளர்களால் தங்கள் மாவட்டத்தில் இறால் வளர்ப்பில் தாங்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதனை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் … Read more

இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு

இலங்கை மற்றும் கியூபா இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. நட்புறவுச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்செலோ கரிடோவும் (Andres Marcelo Garrido) கலந்துகொண்டார். இலங்கை … Read more

சட்டவிரோதமாக விற்பனைசெய்ய தயாரிக்கப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் அனுராதபுரம் உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து (14) மெதவச்சிய வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட பதினோராயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (11,377) Pregabalin Capsules 150 mg வகையின் மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார். வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கடற்படையினர் அனுராதபுரம் உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் … Read more

பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பிற்காக இலங்கைக் குழு மற்றும் அமைச்சர்  அலிசப்ரியுடன் சந்திப்பு

வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் “பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பிற்கான இலங்கைக் குழு” நேற்று (15) வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தது. பலஸ்தீன் மக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சருக்கு அறியப்படுத்தியதுடன் எமது வரலாறு மிக்கதாக எழுந்து நிற்கும் பலஸ்தீன் மக்களுக்காக சுய நிர்ணயம் தொடர்பாக அடிப்படை உரிமைக்காக இலங்கையின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து மீண்டும் அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அது மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கிணங்க, இரு மாநிலக் கட்டமைப்பிற்கு ஊடாக விரைவான தீர்மானமொன்றைக் காண்பது … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியால் 30000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியினால் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8892 குடும்பங்களைச் சேர்ந்த 29508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. செங்கலடி பிரதேச … Read more

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீட்டுத்திட்டம்

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து இதை நடைமுறைப்படுத்தவுள்ளன. மூன்று நடைமுறைகளில் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதலாவது நடைமுறைப்படி, சொந்த காணியில் வீடு நிர்மாணிப்பது. இரண்டாவது, காணி இல்லாதவர்களுக்கு நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் நிர்மாணித்தல். மூன்றாவது முறை, அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்தல். … Read more

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் – கொழும்பு இடையில் நகர்சேர் ரயில் சேவை ஆரம்பம்.வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க திட்டம் – மடு மாதா தேவாலய திருவிழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம். மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி … Read more