அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை புதிய ரயில் பாதை – அமைச்சர் பந்துல குணவர்தன

அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரையிலான 11 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி திறந்து வைக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள இந்த … Read more

பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பிற்கான இலங்கைக் குழு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியுடன் சந்திப்பு

வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் “ பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பிற்கான இலங்கைக் குழு” இன்று (15) வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தது. பலஸ்தீன் மக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சருக்கு அறியப்படுத்தியதுடன் எமது வரலாறு மிக்கதாக எழுந்து நிற்கும் பலஸ்தீன் மக்களுக்காக சுய நிர்ணயம் தொடர்பாக அடிப்படை உரிமைக்காக இலங்கையின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து மீண்டும் அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அது மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கிணங்க, இரு மாநிலக் கட்டமைப்பிற்கு ஊடாக விரைவான … Read more

பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆகஸ்ட் 28 ஆரம்பமாகும்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிமை இரண்டாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்துப் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் 2023 ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முடிவடைவதுடன், இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனரக வாகன இயக்குனர் பயிற்சி வழங்கும் திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஊடாக கனரக வாகனங்களை இயக்கும் பயிற்ச்சி நெறியை நாடாத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக வாகன இயக்குனர்ளுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 14 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் … Read more

அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும்

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் – சுற்றுலா, காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ. அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் … Read more

இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சந்திம வீரக்கொடி தெரிவு

இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி அண்மையில் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் லீசா வொன்ஸ்டோல் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் … Read more

பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரனையுடன் பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கை … Read more

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் செய்யும் மனித நேய சேவை பாராட்டுக்குரியது மட்டுமன்றி பெரிதும் அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும் – பிரதமர் தினேஷ் குணவர்தன

அகில இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் மாநாடு (12) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சேவையில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் ஏனைய மரண விசாரணை அதிகாரிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்- திடீர் மரண விசாரணை அதிகாரி சேவைக்கு இணையாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் தொடர்புபட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் துறைகளும் மிகுந்த … Read more

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் தொழில்துறையாக மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவும் – ஜனாதிபதி

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் சார் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் … Read more

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்தை எதிர்கால சந்ததிவரை கொண்டு செல்ல மாட்டோம்

அனைத்துத் துறைகளும் நவீனமயமாக்கப்பட்டு நாடு முன்னேற்றப்படும் – மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் … Read more