குவைட் நாட்டின் பங்களிப்புடன் கள்-எலிய பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 16 கோடி செலவில் மாணவர் விடுதி..

குவைட் நாட்டின் பைத்துல் ஸஹாத் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் கள்-எலிய இஸ்லாமியப் பெண்கள் அரபுக் கல்லூரியில் சுமார் 16 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டிடமானது நேற்று (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் கள்-எலிய பெண்கள் அரபிபுக் கல்லூரியின் நிர்வாக … Read more

விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை

தேசிய விளையாட்டு சபை மூலம் விளையாட்டுத் துறையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகள் கிடைத்துள்ளன – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க.  விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு … Read more

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கு இந்திய புதிய பிரதி உயர் ஸ்தானிகர் உறுதி  

இலங்கைக்கான இந்திய புதிய பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (ஆகஸ்ட் 11) இடம்பெற்றது.   பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த புதிய பிரதி உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு தனது முழு ஆதரவையும் … Read more

இஸ்ரேலில் 500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு வேலைவேய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் PIBA நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 505 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இஸ்ரேலில் தாதியர் பணிக்காக செல்லவிருந்த மேலும் 25 இலங்கையர்களுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் (ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி) செனரத் யாப்பா மற்றும் … Read more

மடு திருத்தல திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி பல முன்னெற்பாடுகள்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திக் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2 ஆவது கூட்டம் அண்மையில் மடு திருத்தல மண்டபத்தில் … Read more

மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்களை அடையாளம் காண கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்த அறிவுறுத்தல்

மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்களை அடையாளம் காண கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்தவும் – வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு  மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் தற்பொழுதுள்ள கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிகரணவக, பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பணிப்புரை விடுத்தார். கடந்த 24ஆம் திகதி மதுவரித் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் கறுவா உற்பத்தியினை மேற்கொள்ள நடவடிக்கை

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் திட்டமிடலுக்கு இணங்க, கறுவாப் பயிர்ச் செய்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வதற்காக, மாவட்ட விவசாய முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட விவசாயப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. இக்கறுவாச் செய்கை மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  தன்னாமுனை பிரதேச வீ. சுதாகரன் எனும் ஒரு விவசாயியால் … Read more

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்! ஜனாதிபதி

விவசாய நவீனமயப்படுத்தலுக்காக புதிய செயலணி.விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்ட, நீர்பாசன, மாகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை இணைத்து தனியார் துறையின் பங்கெடுப்புடன் மேற்படி செயலணியை நிறுவ எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். “விவசாயத்துறை நவீனமயப்படுத்தல்” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் –  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார். ஜெல் வோட்டர் (டைனமைற்) பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் ஏராளமான மீன் வளங்கள் அழிவடைவதாகவும், இதனைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இக்கூட்டம் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியானின் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், வெளிநாட்டு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியான் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி … Read more