மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விரைவில் காணி உரிமை கிடைக்கும்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டாமன் தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை “மலையக மக்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அனைவரும் அக்கறையுடன் கருத்துகளை முன்வைத்தனர். இன்றைய விவாதத்தை அவதானித்தபோது மலையக மக்களுக்கு விரைவில் … Read more

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிப்பதற்கான பொறிமுறை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில் உள்ளனர் – நீதிமன்ற , சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன. திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்ற , சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் … Read more

துரித பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாட்டை முன்னேற்ற, வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் அவசியம்

வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் (09) நடைபெற்ற இலங்கை வல்லுநர் … Read more

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பாக நுகர்வோரைப் பாதுகாக்கத் திட்டம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பாகக் கவனம் செலுத்தி, நுகர்வோரைப் பாதுகாக்கும் எதிர்காலத் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னான்டோ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் அறிவித்தலுக்கு அமைய விசேட அறிவிப்பை வழங்கிய வர்த்தக அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:ஒரு நாளைக்கு நாட்டிற்கு 85இலட்சம் முட்டைகள் அவசியமானாலும் 55 இலட்சம் முட்டைகள் மாத்திரமே நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கிணங்க நுகர்வோருக்கு 35இலட்சம் முட்டைகள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றன. இப்பற்றாக்குறையை நிரப்புவதற்காக 1/3 … Read more

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

ஆசியான்அங்கத்துவத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ‘ஆசியான்’ அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் … Read more

முல்லைத்தீவுப் படையினரால் வீடற்றவர்களுக்காக 207 வீடுகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல். இராணுவத்தின் பிராந்திய கட்டளை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால், மேலே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களுக்கு மேலதிகமாக, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தற்போதுள்ள சிவில்-இராணுவ உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக சமூக நலன் சார்ந்த பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முல்லைத்தீவுப் பிரதேச மக்கள் கஷ்டங்களோடு பின்னிப் பிணைந்துள்ள நிலையில், பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்குவதன் மூலம் தேவைப்படும் … Read more

நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை ஒரு பருவகால நிகழ்வு என்பதால் அதில் அரசியல் இலாபம் ஈட்ட எவரும் முயற்சிக்கக் கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இலங்கையில் உள்ள 13 மாவட்டங்களில் 50,535 குடும்பங்களைச் சேர்ந்த 166,904 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் … Read more

நாட்டின் எதிர்காலத்திற்காக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பொது இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்போம்

பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலத்தைத் திருத்தத் தயார். மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைக் குழு. வெற்றிகரமான மாகாண சபை கட்டமைப்பினுள் பலமான முறைமை மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் ஆரம்பம் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு. மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு … Read more

மீனவர்களின் பெருமையை பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடி தொழிலை முன்னேற்ற நடவடிக்கை

நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்காத அரச அதிகாரிகள் தொடர்பில் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா. மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி … Read more

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் 

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்த, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி உயர் … Read more